Kya Lafda | டபுள் ஐஸ்மார்ட் – பாடல்
உஸ்தாத் ராம் பொத்தினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர் ஆகியோரின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமான்டிக் மெலடி வெளியாகியுள்ளது. க்யா லஃப்டா பாடலைக் கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்படியாகத் துள்ளல் இசையை வழங்கியுள்ளார் மணி ஷர்மா. இந்தப் பாடலில் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘ஹூக் லைன்’ பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.
தனுஞ்சய் சீபனா, சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ ஹர்ஷ எமானியின் பாடல் வரிகள் மெருகூட்டியுள்ளது. பாடலில் ராம் மற்றும் காவ்யா தாப்பருக்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்.
வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்ஸ் மற்றும் புரோமோஷன்ஸ் செய்து வருகிறது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆ...