டாய் ஸ்டோரி 4 விமர்சனம்
"நட்புன்னா என்ன?" - ஃபோர்க்கி
"நானும், நீயும்தான்" - வுட்டி
"குப்பையா?" - ஃபோர்க்கி
மேலே உள்ள அந்த இமேஜும், இந்த வசனங்களும் தான் ஒட்டுமொத்த படத்தின் சாராம்சமே!
போனி எனும் சிறுமி, குப்பைத் தொட்டியில் வீசப்படும் ஃபோர்க் வகை ஸ்பூனில் இருந்து ஒரு பொம்மையைச் செய்கிறாள். அந்த பொம்மைக்கு உயிர் வந்துவிடுகிறது, ஆனாலும் அது தன்னை ஒரு பொம்மையாக ஏற்றுக் கொள்ள முடியாமல், தானொரு குப்பைதானே என மனமுடைந்து, குப்பைத் தொட்டியைத் தேடி அதில் சென்று விழ சதா முயன்று கொண்டே இருக்கிறது. ஃபோர்க்கி விழும் ஒவ்வொரு முறையும், டாய் ஸ்டோரி 1,2,3 பாகங்களின் நாயகன் ஷெரிஃப் வுட்டி, ஃபோர்கியை சிறுமி போனியிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறான்.
ஒருமுறை ஓடிக் கொண்டிருக்கும் வேனில் இருந்து ஃபோர்க்கி வெளியில் குதித்துவிடுகிறது. போனிக்கு ஃபோர்கியைப் பிடிக்கும் என்பதால், ஃபோர்கியை மீட்க வுட்டியும் வேனில் இருந்து குதிக்கிறான். வுட்...