Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ரகு தாத்தா திரைப்படம், இந்தித் திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசும் படைப்பாகும். சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா, ZEE5 இல், செப்டம்பர் 13 , 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது. ரகு தாத்தா தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் காணக் கிடைக்கும்.நடிகை கீர்த்தி சுரேஷ், “பெண் சுதந்திரத்தை நம்பும் கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ஜீ5 இல் காண உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது நாங்கள் எடுத்துக் கொண்ட கருவினைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்” என்றார்.
ஹோம்பாலே பி...