அடியே விமர்சனம்
பள்ளிக்காலத்தில் தன்னோடு பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்ல எத்தனிக்கும் நாயகனின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக திசை மாறிப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து விரக்தியின் உச்சத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணியும் தருணத்தில் நாயகி இன்னும் தன் நினைவுகளோடு இருப்பது தெரிய வர, தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நினைக்கும் நாயகன், நாயகியைச் சந்தித்து தன் காதலை சொல்ல முனைகிறான். அதற்கு இடையில் நடக்கும் குழப்பங்களை மீறி நாயகனின் காதல் வெற்றி பெற்றதா என்கின்ற கேள்விக்கான விடை தான் திரைப்படத்தின் கதை.
கதையாகப் பார்க்கும் போது, வெகு சாதாரணமான, காதலும், காதல் கைகூடுமா என்கின்ற கேள்வியையும் தவிர்த்து ஒன்றுமே இல்லாத கதையாகத் தோற்றமளிக்கும் ‘அடியே’, அதன் திரைக்கதையினால் வித்தியாசப்படுகிறது. ‘டைம் டிராவல்’ கதைகள் நமக்கு சற்றே பரிச்சயமான கதைகள் தான். அந்த டைம் டிராவல் கதைக்குள் “மல்டி வெர்ஸ்” அதாவ...