“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் பேசிய விநியோகஸ்தர் சக்தி வேலன், ''தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்குக் கடினமான காலகட்டமாக இருந்தது. இருந்தாலும் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்து, இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்தார்.
அதன் பிறகு படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் முழுமை அடையாத முதல் பிரதியை அவர் காண்கிறார். அந்தத் தருணத்தில் என்னையும் அழைத்து இருந்தார். படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு, பத்து நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவருடைய பார்வை என்னவென்று தெரிந்து கொண்டு பேசலாம் என்ற...