செல்ஃபி விமர்சனம்
கற்றோர்க்குச் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு என்பர். ஆனால் இன்று ஒரு எளிய பின்னணி உடையவர்கள் கல்வியில் கரை சேர்வதற்குள் திக்கித் திணற வேண்டியுள்ளது. கல்விச் சேவை, கடமை என்ற நிலையில் இருந்து விலகி வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் எளியவர்கள் திண்டாடுகிறார்கள். மேலும் தனியார் கல்லூரிகளில் மருத்துவச் சீட்டுப் பெறுவதற்கு எத்தனை லட்சங்களைக் கொட்ட வேண்டியுள்ளது. அந்த லட்சங்களைப் பெறுவதற்கு கல்லூரி நிறுவனம் என்னென்ன கூத்துகளை எல்லாம் அரங்கேற்றுகிறது என்பதை ஃப்ளாஷ் அடித்துக் காட்டியுள்ளது செல்ஃபி படம்.
படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், அவரின் நண்பராக வரும் நசீர் பாத்திரம் இருவரும் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் அடிக்கிறார்கள். இதையே பெரும் தொழிலாகச் செய்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். கெளதம் வேலையை ஜீ.வி. செய்ய, அதனால் ஜீ.வி.க்கு சில இழப்புகள் வர, மேலும் சில ஆடுபுலி ஆட்டம் அர...