களரி விமர்சனம்
களரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. 'போர்க்களம்' என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது.
மிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை.
கொச்சியில் குடியேறிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான வாதுருத்தி தான் படத்தின் களம். கதாபாத்திரங்கள் அனைவரும் கேரளாவிலேயே பிறந்த தமிழர்கள். நாயகனின் குடிக்காரத் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து அனைவரும் மலையாளம் கலக்காத தமிழே பேசுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான செனித் கெலோத...