Shadow

Tag: Shutter movie review

ஷட்டர்(2008) – தீராத காதல்

ஷட்டர்(2008) – தீராத காதல்

அயல் சினிமா, சினிமா
உலகம் முழுவதும் பேய்கள் பற்றியப் பார்வை பெரும்பாலும் ஒரே மாதிரியே இருந்து வருகின்றன. தீராத ஏக்கங்களுடன் தற்கொலை செய்துக் கொண்டாலோ அல்லது அசாம்பாவிதங்களால் நிகழும் துர்மரணங்களாலோ தான் உயிர் பிரிந்தவுடன் ஆவியாக அலைய நேருகிறது. ஆனால் உலகில் உலவும் 90% சதவிகித பேய்கள் பெண்களாகவே பதியப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வரும் பேய்களும் அதிகபட்சமாக பெண்களாகவே உள்ளனர். இந்த விஷயத்தில் உலகத் திரைப்படங்களுக்குள் தான் எத்தனை ஒற்றுமை!? இதற்கு என்னக் காரணமாக இருக்கும்? பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களின் குற்றவுணர்ச்சியாக இருக்குமோ!? பென்னும், ஜேன்னும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். பென் ஒரு புகைப்படக் கலைஞன். திருமணம் முடிந்ததும் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு செல்கின்றனர். விமான நிலையத்தில் இறங்கி ஒரு சிவப்பு நிறக் காரில் பயணிக்கின்றனர். இரவு நேரம். ஜேன் கார் ஓட்டிக் க...