32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Tamil thirai vimarsanam

186 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 9 / 13
செய்திகள் வரிசை (பக்கம் 9)
ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review இது புதிது

ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review

தனது மகன் பட்டா மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் செல்லய்யா. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் செல்லய்யா. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பட்டா, உண்டியல் பணத்தைப் பட்டுவாடா செய்யும் தொழிலில் ஈடுபட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். தனது மகனை அப்பிரச்சனையில் இருந்து செல்லய்யா மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. செல்லய்யாவாக பிரபு நடித்துள்ளார். ஒரு மகிழ்ச்சியான தந்தையாக மிகப் பூரிப்பாகப் படம் முழுவதும் வருகிறார். முக்கால்வாசி படம் […]

30/05/2025 Dinesh R
வேம்பு விமர்சனம் | Vembu review சினிமா

வேம்பு விமர்சனம் | Vembu review

அழகான கிராமத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் படமாகக் கவர்கிறது வேம்பு. சிலம்பாட்டத்தில் சாதிக்கவேண்டும் என்பதும், அதன் மூலமாக அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்பதும் வேம்பு எனும் இளம்பெண்ணின் ஆசை. அதற்கு உற்றதுணையாக இருக்கும் வேம்புவின் தந்தை, மூப்பின் காரணமாக மகளுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைக்கவேண்டுமென எண்ணி, தங்கை மகன் வெற்றிக்கு மகளைக் கட்டிக் கொடுக்கிறார் வேம்புவின் தந்தை. கல்யாணமான அன்றே வெற்றிக்குப் பார்வை பறிப் போக, வேம்புவின் வாழ்க்கை எத்தகைய சிக்கல்களுக்கு உள்ளாகிறது என்றும், அதிலிருந்து அக்குடும்பம் […]

25/05/2025 Dinesh R
மையல் விமர்சனம் | Myyal review சினிமா

மையல் விமர்சனம் | Myyal review

ஆடு திருடனான மாடசாமிக்கும், மந்திரம் – தந்திரம் தெரிந்த அல்லிக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் சமய சந்தர்ப்பம் சாதகமாக இல்லாததால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. மையல் என்பது மயக்கம் அல்லது மோகம் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன். மைனா படத்தில் கிளைச்சிறை பொறுப்பதிகாரி பாஸ்கராக நடித்திருந்த சேது, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மையல் படத்தின் இயக்குநர் APG ஏழுமலை, […]

24/05/2025 Dinesh R
ஏஸ் விமர்சனம் | Ace review இது புதிது

ஏஸ் விமர்சனம் | Ace review

சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது. குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், […]

23/05/2025 Dinesh R
மாமன் விமர்சனம் | Maaman review சினிமா

மாமன் விமர்சனம் | Maaman review

அக்கா மகனுடன் நாயகனுக்கு ஏற்படும் அதீத பிணைப்பும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை. மாமனுக்கு மிஞ்சிய உறவில்லை என்பது பழமொழி. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள், ‘தாய்மாமன்’ உறவிற்கு எப்பொழுதும் கூடுதல் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்துள்ளனர். இரண்டு, மூன்று தசாப்தங்களாக உறவினர்களின் பாராமுக மனப்போக்கைக் கிண்டல் செய்யும் வழக்கம் மிகுந்துவிட்ட போதிலும், நண்பர்கள் தங்களுக்குள் ‘மாமா – மச்சான்’ என்றே உறவுமுறை கொண்டு அழைத்துக் கொள்வது 80 களில் தொடங்கி, போன தசாப்தம் வரையிலுமே கூட […]

16/05/2025 Dinesh R
நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review சினிமா

நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். நிழற்குடையின் அருமையோ வெயில், மழை என இரண்டிலும் தெரியும். நிழற்குடையை மனித உறவுகளுக்கான குறியீட்டுத் தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்றொரு குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்-டேக்கரை நியமிக்கிறார்கள். ஆனால் கேர்-டேக்கர் ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை அழைத்து வருகின்றனர். திடீரென நிலா காணாமல் […]

09/05/2025 Dinesh R
HIT: The Third Case விமர்சனம் | Hit 3 review அயல் சினிமா

HIT: The Third Case விமர்சனம் | Hit 3 review

விசாரணையை மையமாகக் கொண்ட முதலிரண்டு பாகங்களைப் போலல்லாமல், கொஞ்சம் விசாரணை — பக்கா ஆக்‌ஷன் த்ரில்லராக ஹிட் 3-ஐ இறக்கியுள்ளார் இயக்குநர் சைலேஷ். தலைக்கீழாகத் தொங்க விட்டு, ஒரு மனிதரின் கழுத்தை அறுத்துக் கொள்ளும் வழக்கினை அர்ஜுன் சர்க்கார் விசாரிக்கிறார். இந்தியா முழுவதும் இந்த பாணியில் பல்வேறு கொலைகள் நடப்பதைத் தெரிந்து கொள்கிறார். டார்க் நெட் மூலமாக, இந்தக் கொலைகாரர்களை இயக்குபவனைக் கண்டறியக் களமிறங்குகிறார் அர்ஜுன் சர்க்கார். மிருதுளா எனும் ASP பாத்திரத்தில், KGF நாயகி ஸ்ரீநிதி […]

02/05/2025 Dinesh R
ரெட்ரோ விமர்சனம் | Retro review இது புதிது

ரெட்ரோ விமர்சனம் | Retro review

ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும். தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் […]

01/05/2025 Dinesh R
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review இது புதிது

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் […]

30/04/2025 Dinesh R
கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review இது புதிது

கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review

ஒரு பள்ளிச்சிறுமி காணாமல் போக, அவ்வூரில் நடக்கும் பல குற்றங்களையும் பட்டியலிட்டு, பள்ளி ஆசிரியை ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். அப்புகாரைப் புலனாய்வு செய்ய காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவ்வூரிற்கு ஆசிரியரராக வரும் சரவணன், பள்ளிச்சிறுமி காணாமல் போனதன் மர்மத்தைக் கண்டுபிடிப்பதோடு, அந்த ஊரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூறு கோடியையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார். அதற்கு அவருடன் இணையும் கேங்கர்ஸ் உதவுகின்றனர். ஆசிரியை சுஜாதாவாகக் கேத்தரின் தெரசாவும், விளையாட்டு ஆசிரியர்கள் சிங்காரமாகவும் சரவணனாகவும் வடிவேலுவும், சுந்தர்.சி-யும் நடித்துள்ளனர். […]

25/04/2025 Dinesh R
வல்லமை விமர்சனம் | Vallamai review சினிமா

வல்லமை விமர்சனம் | Vallamai review

திறன், பலம், வலிமை, ஆற்றல், சக்தி என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். விவசாயப் பின்னணியையுடைய சரவணனும், அவரது மகள் பூமிகாவும் கல்விக்காகச் சென்னைக்கு வருகிறார்கள். எவரோ சிறுமி பூமிகாவை மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிடுகின்றனர். அது யாரெனக் கண்டுபிடித்து, தான் அனுபவிக்கும் வலிக்குப் பழி வாங்கவேண்டுமென விரும்புகிறாள் பூமிகா. அக்கொடியவனைச் சரவணனும் பூமிகாவும் எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சரவணனாக பிரேம்ஜி நடித்துள்ளார். மிகவும் பாவப்பட்டவராக, நடக்கவும் நடிக்கவும் மிகவும் சிரமப்படுபவராக, ஆள் […]

24/04/2025 Dinesh R
அம்… ஆ விமர்சனம் | Am… aa review அயல் சினிமா

அம்… ஆ விமர்சனம் | Am… aa review

மலையாளப் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவந்தா எனும் மலைக்கிராமத்திற்கு, சாலை ஒப்பந்தக்காரரான ஸ்டீஃபன் வருகிறார். அந்தக் கிராமத்தில் ஒரு அம்மிணியம்மாவும், செவிப்புலன் திறன் கம்மியாக இருக்கும் அவர் பேத்தி குயிலியும் வசிக்கின்றனர். ஸ்டீஃபன் அவர்களைப் பற்றிக் கிராமத்தாரிடம் விசாரிக்க, யாருக்கும் அவர்கள் எங்கிருந்து அந்தக் கிராமத்திற்கு வந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அந்த ஊரின் ரகசியங்களை அறிந்த கண் தெரியாத முதியவர் ஒருவர், அம்மிணியம்மாவைப் பற்றி […]

18/04/2025 Dinesh R
நாங்கள் விமர்சனம் | Naangal review இது புதிது

நாங்கள் விமர்சனம் | Naangal review

நாங்கள் என்பது ஒரு கண்டிப்பான தந்தை, அவரது மூன்று மகன்கள் மற்றும் அவர்களது நாய் ஆகிய ஐவரைக் குறிக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ஒரு கலைப்படமிது. மின்சாரமும, தண்ணீர் வசதியும் இல்லாத வீட்டில், கார்த்திக், துருவ், கெளதம் ஆகிய மூன்று சிறுவர்கள் எல்லா வேலையையும் செய்கின்றனர். அச்சிறுவர்களின் தந்தை ராஜ்குமார் வந்ததும், அச்சிறுவர்களின் இறுக்கமும் பொறுப்பும் மேலும் அதிகமாகிறது. அச்சிறுவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளரும் அவர்களது தந்தையே! அந்தச் சிறுவர்கள் அவர்களது தந்தையிடம் […]

16/04/2025 Dinesh R
Good Bad Ugly விமர்சனம் | GBU review இது புதிது

Good Bad Ugly விமர்சனம் | GBU review

அஜித்தின் விசிறிகளை மகிழ்விப்பதற்கென்றே படத்தை எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மாஸாக அஜித்தைக் காட்ட, படத்தின் கதையில் அதற்கான தருணங்களை உருவாக்காமல், ஃப்ரேம்க்கு ஃப்ரேம் மாஸ் தெரியவேண்டும் என்ற எளிய சூத்திரத்தைக் கையிலெடுத்து, முழுப் படத்தையும் 139 நிமிட மெகா ரீல்ஸாகக் கொடுத்துவிட்டார் ஆதிக். ரெட் டிராகன் எனும் டானாகிய AK, நல்ல தந்தையாக மகனைச் சந்திக்க வேண்டுமெனச் சட்டத்தின் முன் சரணடைகிறார். அவர் சிறையில் இருந்து வெளியாகும் பொழுது, மகனோ ஸ்பெயின் சிறையில் அடைப்படுகிறார். மகனைக் காப்பாற்ற […]

10/04/2025 Dinesh R
டெஸ்ட் | TEST review – NetFlix OTT

டெஸ்ட் | TEST review – NetFlix

விஞ்ஞானி சரவணனுக்கும், அவரது மனைவி குமுதாவிற்கும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் அர்ஜுன் வெங்கட்ராமனுக்கும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வர லஞ்சம் தருவதற்குப் பணம் தேவைப்படுகிறது; ஒரு குழந்தைக்காக ஏங்கும் குமுதாவிற்கு அதற்கான மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அர்ஜுன் வெங்கட்ராமன் பாகிஸ்தான்க்கு எதிரான போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. குமுதாவாக நயந்தாரா தோன்றியுள்ளார். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், […]

03/04/2025 Dinesh R