Shadow

Tag: Tamil thirai vimarsanam

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதைக் கொஞ்சம் உண்மைச் சம்பவங்களை நிறையக் கற்பனையுடன் புனைவாகக் கலந்து கட்டி அற்புதமானதொரு அரசியல் பகடிப்படத்தைத் தந்துள்ளனர் தந்தை மகனுமான தம்பி இராமையாவும், உமாபதி S.இராமையாவும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ போலவே ஒரு கொண்டாட்டமான படத்தைக் கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் மறுபடியும் அளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவியும், தீபக் ரவியும். அடுத்த எம்.ஜி.ஆராகக் குல்கந்த் குமார் எனும் நடிகர் பரிணமிப்பார் என்பதை அனுமானித்து, அவரைப் போஷித்து, ஊக்குவித்து வளர்த்தெடுக்கிறார் நிலச்சுவன்தாரான மன்றாடியார் எனும் பொள்ளாச்சி கோடீஸ்வரர். அவரது எண்ணம் போலவே குல்கந்த் குமார் வளர்ந்து தமிழகத்தின் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். குல்கந்த் குமாரின் 50 ஆவது வயதில் அவரை அரசியலுக்குள் கொண்டு வருகிறார் மன்றாடியார். அதன் பின் என்னாகி...
பைக்கர் விமர்சனம் | Biker review

பைக்கர் விமர்சனம் | Biker review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இஷான் நாராயண் எனும் சிறுவன், பைக் ரேசர்களான தன் தந்தைக்கும் தாத்தாக்கும் வாழ்க்கையை உணர்த்துவதுதான் பைக்கர் படத்தின் கதை. நமது தந்தையை ஒருவன் அவமானப்படுத்தினால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என விகாஸ் நாராயணுக்கும், குடும்ப உறவுகளும் பிணைப்பும் லட்சியத்திற்கான உத்வேகத்தை அளிக்குமேயன்றி கவனச்சிதறலாக மாறாது என புல்லட் சுனில்க்கும் உணர்த்துகிறான் இஷான். மனைவி அனன்யா கேட்டுக் கொண்டதற்காக பைக் ரேஸிங்கை விட்டு விலகும் சேம்பியனான விகாஸ், தந்தைக்கு நேரும் அவமானத்தைத் துடைக்க மீண்டும் ரேசிங்கிற்கு வருகிறான். ஆனால், விகாஸின் முடிவை தந்தை, மனைவி என இரு உறவுகளுமே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். விகாஸ் ரேசில் மட்டுமல்ல உறவுகளையும் எப்படி வெல்கிறான் என எமோஷ்னலாகச் சொல்கிறது படம். பைக் ரேசிங் என ஒரு பக்கம் விஷுவலில் அதகளம் புரிந்தாலும், ஒளிப்பதிவாளர் J.யுவராஜின் கேமரா கதாபாத்திரங்களின் எமோஷ்னலைத் துல்லிய...
கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review

கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review

இசை விமர்சனம், சினிமா
ஒரு பணக்காருக்குக் கார் ஓட்டுநராகப் பணி புரியும் செல்வம், அவரது வாழ்வில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நெருக்கடியும், அதைச் சமாளிக்க அவர் தேர்ந்தெடுக்கும் பாதையும், அப்பாதையில் எழும் விளைவுகளே இப்படத்தின் மையச்சரடு. பணக்கார முதலாளி சம்பத்தாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மனைவி தேவியாக நடித்துள்ள அபிநயா மிகச் சில காட்சிகள் வந்தாலும், படத்தில் அவரது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தப் படத்தில் வரும் செல்வம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதனால்தான் சம்பத் போலும், தேவி போலும் முதலாளிகள் அவனுக்குக் கிடைத்துள்ளனர். அவனது அழகான சின்ன வாடகை வீடும், பணக்கார முதலாளியே பொறாமைப்படும் இடத்தில் அமைந்துள்ளது. அவனுக்கு இக்கட்டான சூழலில் உடனுக்கு உடன் கடன் கிடைக்கிறது, அதை அடைக்க வழியும் கிடைக்கிறது. அதை எல்லாம் அனுபவித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு, ‘ஃபோன...
லீடர் விமர்சனம் | Leader review

லீடர் விமர்சனம் | Leader review

சினிமா, திரை விமர்சனம்
தனது மகளுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் ஒரு பாசமிகு தந்தையின் அதிரடி ஆக்‌ஷன் தான் லீடர். தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சால்ட் எனும் ரெளடியைக் கண்காணிக்கிறார் காவல்துறை அதிகாரி இந்திரா. உண்மையைக் கண்டறிய சக்திவேல் எனும் மெக்கானிக்கின் மகளைக் கடத்தி துறைமுகத்திலுள்ள சந்தேகத்துக்குரிய கன்டெயினரைச் சாதுரியமாக மடக்குகிறார். அதனால் பெரும்சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சக்திவேல், சால்டிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார், அவரால் எப்படித் தப்பிக்க முடிந்தது, உண்மையில் சக்திவேல் யாரென்பதற்கெல்லாம் பதில்தான் லீடர் படத்தின் கதை. லெஜண்ட் சரவணனின் முதற்படத்திலுள்ள அதே பிரம்மாண்டம் இப்படத்திலும் உள்ளன. ஆனால், இப்படத்தில் ஆடம்பர பிரம்மாண்டமாக இல்லாமல் கதைக்குத் தேவைப்படும் விஷுவலில் பிரம்மாண்டம் காட்டியுள்ளனர். நடிப்பிலும், முதற்படத்தை விட பல மடங்கு மெருகேறிப் படத்தில் கச்சிதமாகப் பொருந்தி...
காளிதாஸ் 2 விமர்சனம் | Kaalidas 2 review

காளிதாஸ் 2 விமர்சனம் | Kaalidas 2 review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஸ்ரீ செந்தில், காளிதாஸ் (2019) படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லராகக் கொடுத்து சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்திருந்தார். இப்படத்தை இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக ரசிக்கும்படி கொடுத்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மித்ரா எனும் மூன்று வயது சிறுமி காணாமல் போக, அதை விசாரிக்க வருகிறார் காளிதாஸ். காணாமல் போன சிறுமிக்கு என்னாகிறது என்பதையும், அந்தக் குடியிருப்பு தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்பதையும் பரபரப்பாகக் கடைசி நொடி வரை தக்கவைத்துள்ளது திரைக்கதை. மனதில் மிகப் பெரிய வலியுடனும் சினத்துடன் உள்ள ஸ்டீஃபனாக நடித்துள்ளார் அஜய் கார்த்தி. வெறியோடு ஆட்களைக் கொல்லும்பொழுதும், மற்றவர்களை ஊடுருவி அவர் பார்க்கும் பார்வையும், போலீஸ் விசாரணையின் பொழுது அவர் காட்டும் அலட்சியமும் மெளனமும் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அவை எல்லாவற்றிற்கும் அவரிடம் சரியானதொரு காரணம் உள்ளன என்ற கிளைக...
நீளிரா விமர்சனம் | Neelira review

நீளிரா விமர்சனம் | Neelira review

சினிமா, திரை விமர்சனம்
நீளிரா = நீள் + இரா. நீண்ட இரவு என்பதைத் தலைப்புக் குறைக்கிறது. இலங்கையின் வடக்குப் பகுதியில், 1988 ஆம் ஆண்டு, திருமணம் செய்வதற்காக IPKF (இந்திய அமைதி காக்கும் படை) - இடமிருந்து அனுமதி வாங்குகின்றனர் ஓர் ஈழத் தமிழர் குடும்பத்தினர். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவன்று, இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர் அவ்வீட்டிற்கு வருகின்றனர். அவர்களைப் போராளிகள் தாக்க முற்படுகின்றனர். இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு, அந்நீண்ட இரவில் அந்தக் குடும்பம் படும் பெரும்பாடுதான் தான் நீளிரா படத்தின் கதை. 'யாரிடம் இருந்து எங்களைக் காப்பாற்ற வந்தீர்களோ, அவர்களுடன் இணைந்து கொண்டு எங்களை வதைக்கிறீர்கள்', 'எங்க ஒரு குடும்பத்துக்காவது அமைதியைக் கொடுங்களேன்' என்ற சவுக்கைச் சுழற்றும் வசனங்கள் படத்தில் இருந்தாலும், சோமிதரன் அதை வலிந்து திணிக்காததாலோ என்னவோ, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் ...
நீ Forever விமர்சனம் | Nee ஃபாரெவர் review

நீ Forever விமர்சனம் | Nee ஃபாரெவர் review

சினிமா, திரை விமர்சனம்
அழகான ஆண் மட்டுமல்ல அனைவருக்குமே டேட்டிங் செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவேண்டுமென நினைக்கிறான் மகிழ்ச்சியற்ற அஜய். அநாதை ஆசிரமத்தில் வளரும் மதிக்கு சினிமா இயக்குநராக வேண்டுமென்ப்ச்து ஆசை. காதலிக்காமல், காதலின் அனுபவம் வாய்க்காமல் எப்படி டேட்டிங் செயலி உருவாக்க முடியும் என்று அஜயிடம் கேட்கப்படுகிறது; ஒரு காதல் கதையைப் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு மதியிடமும் வழங்கப்படுகிறது. இருவரும் காதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள ட்ரபிள் (Trouble) எனும் கைபேசி செயலியில் இணைகின்றனர். கழட்டி விடும் உள்நோக்கத்துடன் இருவரும் அறிமுகமாகி நல்லவிதமாகப் பழகுகின்றனர். நாயகனின் நண்பர்கள் ராக்கி, கூக்கியாக நடித்துள்ள பிரதோஷும், நோபல் ஜேம்ஸும் கொஞ்சம் கலகலப்பிற்கு உதவுகின்றனர். அஜயாக நடித்துள்ள சுதர்சன் கோவிந்த் நல்ல நாயக வரவு. நன்றாக நடனமாடுகிறார். சில காட்சிகளில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஆனால் கதாபாத்திர வ...
Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகத் தகர்ந்து விட, ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போம் என்று கையறு நிலையில் செய்யப்படுவதை, ‘ஹெயில் மேரி’ என்பார்கள். இப்பதம் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படுவதாகும். பூமியைக் காப்பாற்ற, அப்படி மேற்கொள்ளப்படும் ஒரு கடைசி முயற்சிக்கு ப்ராஜெக்ட் ஹெயில் மேரி என பெயர் வைக்கிறார்கள். சூரியனை மெல்ல மங்கச் செய்கிறது ஆஸ்ட்ரோபேஜ் எனப்படும் நுண்ணுயிரி. அந்த ஆஸ்ட்ரோபேஜ்களைத் தடுக்காவிட்டால், அடுத்த முப்பது வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து பெரும் பாதிப்புகளை விளைவிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. ‘டெள சீ-டை (Tau Ceti)’ எனும் நட்சத்திரம் மட்டுமே இந்நுண்ணுயிரியின் பாதிப்பில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்பதைக் கண்டறிகின்றனர். அந்நட்சத்திரம் மட்டும் எப்படி ஆஸ்ட்ரோபேஜ்களின் தாக்குதலில் இருந்து தப்பின என்று க...
யூத் விமர்சனம் | Youth review

யூத் விமர்சனம் | Youth review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பள்ளியில், மூன்று பெண்களைக் காதலித்த பின், காதல் என்றால் என்னவென்று புரிதல் பிரவீனுக்கு ஏற்படுவதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தை அனைத்துப் பேற்றோர்களுக்கும் அர்ப்பணித்துள்ளார் இயக்குநர் கென். அறிமுக இயக்குநராகக் கென், தனது படைப்புத் திறனை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பறைசாற்றியுள்ளார். ஃப்ரேம்க்கு ஃப்ரேம் கொண்டாடும் வகையில் இளமைத் துள்ளலுடன் ரசிக்க வைக்கிறது. அதற்கு உற்ற துணையாகத் தனது இசையின் மூலம் சகாயம் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஒளிப்பதிவாளர் விக்கி கதாபாத்திரங்களின் சின்னச் சின்ன பாவனைகளையும் அழகாகப் படம்பிடித்துள்ளார். அதை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படத்தொகுப்பாளர் காட்சிகளாகக் கோர்த்து அசத்தியுள்ளார். கதாபாத்திரத் தேர்வுகளிலேயே மேக்ஸிமம் ஸ்கோர் செய்துவிடுகிறார் இயக்குநர் கென் கருணாஸ். நாயகனின் பெற்றோராக நடித்துள்ள சுராஜ் வெஞ்சுரமூடு – தேவதர்ஷினி இணை படத்தின் மிகப் பெரு...
கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கர்ப்பிணியாக இருக்கும் அனுசுயாவைக் காளி தன் குலதெய்வமான நிறை சூலியை வழிபட அழைத்துச் செல்கிறான். அப்பயணம் கொட்டுக்காளியை நினைவுறுத்துவதாக உள்ளது. படம் தொடங்கியதுமே, ஓர் அமானுஷயத்திற்குத் தயார்ப்படுத்துகிறது சாந்தனின் பின்னணி இசை. P.G.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். குறிப்பாக இசையுடன் இணைந்து ட்ரோன்ஸ் ஷாட் ஏதோ ஒரு சம்பவத்திற்குப் பார்வையாளர்களைத் தயார் செய்து கொண்டே உள்ளது. கார்த்திக் தாமோதரனின் ஒலி வடிவமைப்பு, மலைக்காட்டில், ஓடை சலசலப்பில் இருக்கும் உணர்வைத் துல்லியமாக ஏற்படுத்த உதவியுள்ளது. இசையும் ஒலியும் ஏற்படுத்தும் ஓர் அழுத்தத்தில் இருந்து நாயகனின் நண்பன் குமாராக நடித்துள்ள பால சரவணனே காப்பாற்றுகிறார். இதற்கே, லப்பர் பந்து போல் தனித்துவமான பாத்திரப்படைப்பாக இல்லாவிட்டாலும், 'என்னையே இந்தக் குடும்பம் வேலை வாங்குது' என ஒப்பேத்தும் வசனத்தைக் கொண்டு மட்டுமே ரசிக்க வைக்கிறார்....
வெஞ்சென்ஸ் விமர்சனம் | Vengeance review

வெஞ்சென்ஸ் விமர்சனம் | Vengeance review

சினிமா, திரை விமர்சனம்
மாவட்ட ஆட்சியராக இருந்து அரசியல் சாணக்கியராக உயரும் வேணி எனும் இளம்பெண்ணை மையமாகச் சுழலும் ஓர் அரசியல் த்ரில்லர் படம். 2042 ஆம் ஆண்டு, இனிக்கியா நாட்டில், தாய்நாடு மாநிலத்தில், வேணி மாவட்டத்தில் கதை தொடங்குகிறது. ஒரு மாறுபட்ட அனுபவத்திற்குத் தயாராக்கும் முஸ்தீபுகளுடன் படம் தொடங்குகிறது. 'யார்றா அந்த வேணி?' எனும் கேள்விக்குப் பதில் சொல்ல, 1985 க்கு அழைத்துச் செல்கிறார் சச்சு. காவேரி மாவட்டத்தில் வாழும் வேணி எப்படி கலெக்டரானார், ஏன் பதவி பறிப் போனது, எவ்வாறு அரசியலுக்குள் வந்தார், அதிலிருந்து ஏன் ஓரங்கட்டப்பட்டார், எப்படி மீள்கிறார் என்பதே கதை. இவற்றை, முதல் ஒளி, நிழல் அரசி, இருளின் ஒளி, அரியணையின் அரசியல், அழிவின் எழுச்சி என ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார் இயக்குநர் ராகுல் அஷோக். கதாநாயகியை மையப்படுத்திய அரசியல் படம் என்பது மிக ரேர் காம்போ. அதுவும் எப்பொழுதும் புகழ் வெளிச...
போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

சினிமா, திரை விமர்சனம்
ஒருவனின் பழிவாங்கும் உணர்வு, சம்பந்தமே இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. யாரோ ஒருவன், முன்னால் ரெளடி தனாவின் மகனைக் கொன்றுவிட, காவல்துறையினர்தான் அவனைக் கொன்று விடுவதாகத் தனா தவறாக நினைத்துக் கொள்கிறான். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் வெஞ்சினத்துடன் தேடித் தேடிக் கொல்வதுதான் போலீஸ் ஃபேமிலியின் கதை.தனாவாகப் பருத்தி வீரன் சரவணன் நடித்துள்ளார். மகனின் மரணத்திற்குக் காரணமான அனைவரது குடும்பத்தையும் கொன்றே தீருவது என்று ஆவேசமாக உள்ளார். அப்படி சிலரைக் கொன்றதும், வலியே இல்லாமல் இறந்து விடுவார்கள் எனக் குடும்பத்தாரை மட்டும் கொல்ல ஆணையிடுகிறார். ஏட்டு சுரேஷாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் காதல் சுகுமார். அவ்வளவு கனமான பாத்திரம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தைத் தருமளவிற்கு சுகுமார் அனுகூலமான நடிப்பை வழங்கவில்லை. அனிதா எனும் கதாநாயகி...
முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

சினிமா, திரை விமர்சனம்
முப்பது வருடங்களுக்கு முன் வெளியான 'காதல் தேசம் (1999)' படத்தில், நட்பின் மேன்மையையும் இணக்கத்தையும் எடுத்தியம்பும் பாடலின் தொடக்கச் சொற்கள் 'முஸ்தபா முஸ்தபா' ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த அப்பாடல் நட்பிற்கான பாடலாக மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஆழமான நட்பினைச் சொல்லும் விதமாக இத்தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி சேனலில் வேலை செய்யும் கார்த்திக், எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில் ஒருநாள் மட்டுமே நடித்த ஒரு மார்க்கமான காட்சி, ஆபாச (porn) இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் காதலியோடு திருமணம் என்ற நிலையில், நண்பன் வாசுவுடன் இணைந்து, அந்த வீடியோவை நீக்க படாதபாடுபடுகிறான் கார்த்திக். வாசுவும் கார்த்திக்கும் அந்த வீடியோவைக் கல்யாணத்திற்கு முன் நீக்கினார்களா இல்லையா என்பதுதான் கலகலப்பான படத்தின் முடிவு. ஹேக்கர் சிட்டியாகக் க...
காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

இது புதிது
ஒரு நாள் நிகழ்வு மட்டுமே ஞாபகமிருக்கும் அதிதியைத் தினம் தினம் புதிதாகக் காதலிக்கிறார் சித்தார்த். 50 First Dates (2004) படத்தின் ஒரு வரிக் கதையால் இன்ஸ்பையராகி, இசை, துரோகம், ஏமாற்றம், ஆழ்ந்த காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு முக்கோண காதல்கதையைத் தந்துள்ளார் இயக்குநர் விஜய்.'சிரிச்சா போச்சு' எனும் விரதத்தைப் பூண்டவராகச் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மதும்கேஷ். அதிதி காதலைச் சொல்லும் இடத்திலும் கூட மருந்துக்கு முகத்தில் ஒரு மாற்றத்தைக் காட்டிவிடக் கூடாத என கங்கணம் கட்டிக் கொண்டு நடித்துள்ளார். இயக்குநர் விஜயின் கதாபாத்திர வார்ப்பே அப்படித்தான் என்பதைச் சிறு வயது சித்தார்த்தாக வரும் சிறுவனின் நடிப்பில் இருந்து யூகிக்க முடிகிறது. பிரதான கதாபாத்திரத்தின் உணர்ச்சியற்ற முகத்தாலோ என்னவோ, ஹாரிஸ் ஜெயராஜின் தோளில் அதிக சுமையேறி விடுகிறது. நாயகனின் காதலையோ, அவனது மனவுணர்வுகளையோ மதும்கேஷ் ...
99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

சினிமா, திரை விமர்சனம்
அறுபத்தாறாம் எண் வீட்டில் வசிக்கும் சங்கீதாவும், தொண்ணூற்று ஒன்பதாம் எண் வீட்டில் வசிக்கும் ரஞ்சிதாவும் தோழிகள். சங்கீதாவிற்கு அமானுஷ்யமான கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு நல்ல பெண் ஆத்மா இருப்பதே அதற்கெல்லாம் காரணம் என்று துர்கா தேவி அன்னையார் சொல்கிறார். அந்த ஆத்மா யார், ஏன் அங்கு இருக்கிறது என்பதே படத்தின் கதை. 9966 எனும் எண் கொண்ட லாரி ஒரு காரை இடிப்பதாகப் படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. புத்தரின் பெயரைத் தாங்கிய அந்த லாரியில் தயாரிப்பாளரும் இயக்குநருமான மூர்த்தி கோபமாக வீற்றுள்ளார். அது நினைவா, கனவா, தீர்க்கதரிசனமா என்ற கேள்விக்கு எல்லாம் படத்தின் பின்பாதியிலேயே பதில் கிடைக்கிறது. படகில் வெள்ளைப் புடவை அணிந்த பெண், ஓர் ஆந்தை, கருப்பு நாய் ஒன்று, பச்சைக்கிளி, கறுப்புப் பூனை, துறவி போல் ஆண் ஒருவர், அச்சுறுத்தும் ஒரு சாமியாரினி ஆகி...