32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Tamil thirai vimarsanam

186 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 10 / 13
செய்திகள் வரிசை (பக்கம் 10)
L2: எம்புரான் | Empuraan review அயல் சினிமா

L2: எம்புரான் | Empuraan review

ஸ்டீஃபன் நெடும்பள்ளி, P.K.ராமதாஸின் மஹன் ஜதின் ராமதாஸைக் கேரளாவின் முதல்வராக, இப்படத்தின் முதல் பாகமான லூசிஃபரில் நியமித்திருப்பார். ஐந்தாண்டுகளில் ஊழலில் திளைக்கும் ஜதின், தன்னைத் தற்காத்துக் கொள்ள வலதுசாரி தேசியக் கட்சியான ‘அகண்ட சக்தி மோர்ச்சா (ASM)’ உடன் கூட்டணி வைக்கிறார். கடவுளின் நாடான கேரளாவைக் காப்பாற்ற ஸ்டீஃபன் நெடும்பள்ளியை அழைக்கிறார் கோவர்தன் எனும் விசில்-ப்லோயர் (Whistle blower). தேவபுத்திரனிடம் இருந்தும், பஜ்ரங்கி பாபாவிடம் இருந்தும், தெய்வத்திண்ட தேசத்தைக் காப்பாற்ற சொர்க்கத்தில் இருந்து துரத்தப்படும் லூசிஃபர் எழுந்தருள்கிறார். […]

28/03/2025 Dinesh R
வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review இது புதிது

வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன […]

28/03/2025 Dinesh R
அஸ்திரம் விமர்சனம் | Asthram review சினிமா

அஸ்திரம் விமர்சனம் | Asthram review

அஸ்திரம் என்றால் ஆயுதம் எனப் பொருள்படும். அதுவும் இப்படத்தின் உபதலைப்பான சீக்ரெட் என்பதோடு பொருத்திப் பார்த்தால் ‘ரகசிய ஆயுதம்’ எனப் பொருள் வரும். ஊட்டியிலுள்ள பூங்காவில் ஒருவர் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதே பாணியில் நிகழ்ந்த மரணங்களைத் துப்பு துலக்குகிறார் காவல்துறை அதிகாரி அகிலன். மரணித்தவர்கள் அனைத்தும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் என்ற துப்பினைத் தவிர, அகிலனில் புலனாய்வில் வேறெதுவும் அறிய முடியாமல் போகிறது. பின் ஒரு மருத்துவரின் உதவியோடு தற்கொலைகளுக்குப் பின்னுள்ள […]

22/03/2025 Dinesh R
Trauma விமர்சனம் | Trauma review இது புதிது

Trauma விமர்சனம் | Trauma review

ட்ராமா என்றால் அதிர்ச்சி, வேதனை எனப் பொருள் கொள்ளலாம், அவ்வேதனை மன அதிர்ச்சி, புற அதிர்ச்சி என இரண்டையும் குறிக்கும். திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை என மன வேதனையில் உள்ளார் சுந்தரின் மனைவி கீதா. ஆட்டோ ஓட்டும் தந்தைக்கு ஒரு கால்-டேக்ஸி வாங்கித் தந்துவிட்டுத்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவேண்டும் என நினைக்கும் செல்வி கர்ப்பம் ஆகிவிடுகிறாள். இரண்டு தத்துக்குட்டி கார் திருடர்கள் காரில் பிணத்தோடு காரைத் திருடி போலீஸில் சிக்கிக் கொள்கிறார்கள். இம்மூன்று கதையும் […]

21/03/2025 Dinesh R
வருணன் விமர்சனம் | Varunan: God of Water review சினிமா

வருணன் விமர்சனம் | Varunan: God of Water review

அய்யாவு, ஜான் ஆகிய இருவரும் தங்களுக்குள்ளான புரிதலில், ஒரே ஏரியாவில் பிரச்சனையின்றி தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றனர். ஜானின் மச்சான் தண்ணீர் கேனில் சுண்டக்கஞ்சி விற்க, போலீஸ் ஜானின் வியாபாரத்தை முடக்குகிறது. பின், அந்தப் போலீஸே தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஜானின் பங்குதாரராக, பிரச்சனையின்றி நடந்த வந்த தண்ணீர் கேன் வியாபாரத்தில் போட்டியும் சண்டையும் நுழைகிறது. அய்யாவுவிடம் வேலை செய்யும் தில்லையும் மருதுவும், ஜானின் மச்சான் டப்பாவின் கோபத்திற்கு ஆளாகின்றனர். தில்லையை சிட்டு எனும் பெண் காதலிக்க, […]

15/03/2025 Dinesh R
ஸ்வீட் ஹார்ட் விமர்சனம் | Sweet Heart review சினிமா

ஸ்வீட் ஹார்ட் விமர்சனம் | Sweet Heart review

யாருடனாவது நெருங்கிப் பழகினால், அவர் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் இருப்பவர் வாசு. தன் பயத்தை அவர் உணரும் கணம் அவர் ஸ்வீட் ஹார்ட் ஆகிறார். மனுவும் வாசுவும் காதலர்கள். கல்யாணக்தைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் பேச்சை மாற்றும் வாசுவிடம் கோபத்தைக் காட்டும் விதமாகப் பிரிந்து விடலாம் எனச் சொல்கிறார் மனு. அதனால் கோபமுறும் வாசு மனுவை ஒதுக்குகிறார். ஆனால், மனு கர்ப்பம் எனத் தெரிய வர, வாசு அக்கருவைக் கலைக்க முயற்சி எடுக்கிறான். […]

15/03/2025 Dinesh R
ராபர் விமர்சனம் | Robber review இது புதிது

ராபர் விமர்சனம் | Robber review

‘மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனின் கதையை, அவரது உதவியாளர் SM பாண்டி இயக்கியுள்ளார். மெட்ரோ படத்தைப் போலவே, இப்படமும் செயின் ஸ்னேட்சிங்கை மையப்படுத்திய படம். ‘திருடன் முகத்தை மூடிக் கொண்டு வருவான். திருடிக் கொண்டு போய் விடுவான். ஆனால், ராபர் என்பவன் நின்று பயத்தைக் காட்டித் துன்பறுத்தி நகையைத் திருடிச் செல்வான். இது தான் திருடனுக்கும் ராபருக்கும் உள்ள வேறுபாடு. மெட்ரோ திருடனுடைய கதை, இது ராபருடைய கதை’ என படத்தின் கதாசிரியரான ஆனந்த் கிருஷ்ணன், […]

13/03/2025 Dinesh R
படவா விமர்சனம் | Badavaa review சினிமா

படவா விமர்சனம் | Badavaa review

படவா என்பது போக்கிரி என்ற பொருள் வருமாறு செல்லமாகப் பயன்படுத்தப்படும் சொல். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காத்தூர் எனும் ஊருக்குள் வெட்டியாகச் சுற்றும் வேலனின் போக்கிரித்தனம் பொறுக்க முடியாமல் அவரை ஊரே சேர்ந்து மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கிறது. மலேஷியாவில் வேலை போய்விட, மீண்டும் ஊருக்கு வரத் தயங்கும் வேலன்க்கு உதவுவதற்காக, வேலனுக்கு லாட்டரியில் 10 கோடி விழுந்துள்ளதாக அவனது மலேஷிய நண்பன் பொய் சொல்லிவிடுகிறான். அதை நம்பும் ஊர்மக்கள், அவனை ஊர் தலைவராக எதிர்ப்பில்லாமல் ஏக மனதாக […]

08/03/2025 Dinesh R
லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review சினிமா

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் […]

08/03/2025 Dinesh R
கிங்ஸ்டன் விமர்சனம் | Kingston review சினிமா

கிங்ஸ்டன் விமர்சனம் | Kingston review

ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் 25 ஆவது படம். இப்படத்தை அவரே தனது சொந்த நிறுவனமான பேரரல் யுனிசெர்ஸ் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார். தூவத்தூர் எனும் கடலோரக் கிராமத்தில், 1982 ஆம் ஆண்டு முதல் கடலில் இறங்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தங்கப்பசி கொண்ட ஒருவனது பிணத்தைக் கடலில் வீசி விடுவதால், சபிக்கப்பட்டதாக மாறும் அக்கடல், கடலுக்குச் செல்பவர்களை எல்லாம் பலி வாங்குகிறது. ஊரின் வாழ்வாதாரத்திற்காக, கிங்ஸ்டன் கடலில் இறங்கி மீன் பிடித்து ஊராரின், அக்கிராமத்தின் ஆதித் தொழிலை மீட்டெடுக்க […]

07/03/2025 Dinesh R
நிறம் மாறும் உலகில் விமர்சனம் இது புதிது

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

நிறம் மாறும் உலகில், அதாவது நேரத்துக்குத் தக்கப்படி மாறிக் கொள்ளும் உறவுகளில், என்றுமே மாறாதது தாயின் அன்பு மட்டுமே என அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். தாயோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணை, டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் சந்திக்கிறார். அவர், அபிக்கு நான்கு கதைகளைச் சொல்கிறார். முதல் கதை, மும்பையில் டானாக இருக்கும் அப்துல் மாலிக் பற்றிய கதை. அப்துல் மாலிக்காக நட்டி நடித்துள்ளார். மும்பை சிகப்பு விளக்குப் பகுதியில் பிறக்கும் அப்துல்க்கு […]

07/03/2025 Dinesh R
மர்மர் விமர்சனம் | Murmur review சினிமா

மர்மர் விமர்சனம் | Murmur review

தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) திரைப்படம். இப்படத்தில் பின்னணி இசையும் இல்லை, மற்ற படங்கள் போல் பிரத்தியேகமான கேமரா ஒளிப்பதிவும் இல்லை. போகிற போக்கில், நாம் மொபைலிலோ, கேமராவிலோ படம்பிடிக்கும் ரா ஃபூட்டேஜ்கள் (Raw footage) போல்தான் முழுப்படமுமே உள்ளது. அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள், ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிச்சாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்கள் […]

07/03/2025 Dinesh R
எமகாதகி விமர்சனம் இது புதிது

எமகாதகி விமர்சனம்

நினைத்த காரியத்தை எப்படியும் சாதித்துவிடும் பெருந்திறல் மனம் வாய்க்கப் பெற்றோரை எமகாதகர் என்போம். அப்படி ஒரு நபராக உள்ளார் இப்படத்தின் நாயகி லீலா. லீலா எனும் இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் இறந்த அவளது உடலை வீட்டிற்குள் இருந்து எடுக்க முடியாமல் அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது. லீலாவிற்குத் தீங்கு நினைத்தவர்கள், அவளுக்குப் பிரச்சனை அளித்தவர்கள், அவள் […]

05/03/2025 Dinesh R
கூரன் விமர்சனம் சினிமா

கூரன் விமர்சனம்

கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும். தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, […]

01/03/2025 Dinesh R
அகத்தியா விமர்சனம் சினிமா

அகத்தியா விமர்சனம்

திருவண்ணாமலையைச் சேர்ந்த அகத்தியன், ஒரு படத்தில், முதல்முறையாகக் கலை இயக்குநராகப் பணிபுரிய ஒப்பந்தமாகிறார். அதற்காகப் பாண்டியில் ஒரு வீட்டில், சொந்த செலவில் கடன் வாங்கி செட் போட்டுவிடுகிறார். ஆனால், படப்பிடிப்பே நடக்காமல் அப்படம் நின்றுவிடுகிறது. வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக அவ்வீட்டை ‘பேய் பங்களா’வாக மாற்றுகிறார். அமானுஷ்யமான முறையில் அதுவும் தடைப்படுகிறது. அந்தப் பங்களாவில் நிகழும் அமானுஷ்யத்திற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை உணர்கிறான் அகத்தியா. மேலும், இரத்தப் புற்றுநோயில் பாதிக்கப்பட்ட தன் தாயின் உடல்நலக் […]

28/02/2025 Dinesh R