Shadow

Tag: The Odyseey review in Tamil

The Odyssey விமர்சனம்

The Odyssey விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வால்மீகி ராமாயணம் கி.மு. ஆறாம் நுற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதற்கும் முன்பே பல நுற்றாண்டுகளாக வாய்வழிக்கதையாக ராமாயணம் மக்களிடையே புழங்கி வந்தது. அதே போல, கிரேக்க இதிகாசங்களான ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி என்ற இரண்டு காவியங்களும் சற்றேறக்குறைய அதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டது. இந்த இந்தியக் கிரேக்க இதிகாசங்களுக்குள் ஆச்சரியமான ஒற்றுமைகள் பல உள்ளன. கதையின் நாயகி கடத்தப்படுதல், அவளை மீட்க நடக்கும் போர், கதை நாயகன் குடும்பத்தை, நாட்டைப் பிரிந்து அலைந்து திரிதல், பல சவால்களைச் சந்தித்தல், திருமணம் புரிய வில்லை வளைத்து நாண் ஏற்றும் போட்டியை எதிர்கொள்ளுதல் என பல ஒற்றுமைகள் உள்ளன. இந்து மதத்தைப் போலவே, கிரேக்க மதத்திலும், ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பவையாக விதி, கடவுளின் அருள், தனிமனித முயற்சி ஆகிய மூன்றும் விளங்குகின்றன. இந்த மூன்றின் வலைப்பின்னல் போலவ...