Shadow

Tag: Thupparivalan cinema vimarsanam

துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். அந்த வழக்கு, துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. முகமூடி படத்தின் ஹேங் ஓவர் முழுவதுமாக இயக்குநர் மிஷ்கினுக்கு விலகியதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள், நாயகனைச் சைனீஸ் ரெஸ்டாரன்ட்டிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து, கத்தியை அவர் மீது வீசிக் கொல்ல முனைகின்றனர். அனைவரையும் அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாமல் தெறிக்க விடுகிறார் (நாயகன் சீனர்களைத் துவம்சம் செய்யும் அக்காட்சி பக்தாஸைப் பரவசப்படுத்தும் என்பதில் நோ டவுட்). ஆர்த...