ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்
தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன ரோபாட்ஸ்க்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (உருமாறிகள்) எனப் பெயர். வாகனங்களாக உருவெடுக்கும் உருமாறிகளுக்குப் பெயர் ஆட்டோபாட்ஸ். இந்தப் படத்தொடரின், நாயகர்கள் இந்த ஆட்டோபாட்ஸே! இந்தப் பாகத்தில், உலகைக் காக்க ஆட்டோபாட்ஸ்களுடன் இணையும் புது உருமாறிகளாக மேக்ஸிமல்ஸ் அறிமுகமாகின்றனர். கொரில்லா, புலி, பறவை போன்ற மிருகங்களாக மாறும் ரோபாட்கள் அவை.
கிரகங்களை உண்டு கொழிக்கும் இருள் கடவுளான யுனிக்ரான், மேக்ஸிமல்ஸின் கிரகத்தை அழித்து உண்கிறது. யுனிக்ரான் கையில், ‘ட்ரான்ஸ்வார்ப்’ எனும் நவீன தொழில்நுட்பத் திறவுகோல் கிடைக்கக் கூடாதென மேக்ஸிமல்ஸ் அதை எடுத்துக் கொண்டு மறைகின்றனர். ட்ரான்ஸ்வார்ப் கிடைத்தால், காலத்தையும் தூரத்தையும் வளைத்து, பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுதும் வேண்டுமானாலும் செல்லக்கூடும்.
மேக்ஸிமல்ஸ், ட்ரான்ஸ்வார்பைப் பூமியில் கொண்ட...