Shadow

Tag: Vadhandhi – The Mystery of Mani

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

OTT, Web Series, சினிமா, திரை விமர்சனம்
முதல் முறையாகச் சசிகுமார் காவல்துறை அதிகாரியாகவும், ஓர் ஓடிடி தொடரில் நாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு நிலங்களைக் கையகப்படுத்தி எட்டு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை வைக்கிறது. அப்பொழுது அடிக்கல் நாட்டத் தோண்டும்பொழுது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அந்த எலும்புக்கூடு யாருடையது என்ற விசாரிக்க துணை ஆய்வாளர் மூசா ராசா நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையின் முடிவால், 'முடக்கத்தான்' மணி என்பவர்க்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மணி அந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டான் என நம்பும் மூசா ராசா மிகுந்த சிரமங்களுக்கு இடையில், அவ்வழக்கை மீண்டும் திறக்கிறார். மணியின் மீது மூசா ராசா வைத்த நம்பிக்கை பொய்த்ததா, வென்றதா என்பதே தொடரின் முடிவு. முந்தைய சீசன் போலவே கலகலப்பிற்கு உதவியுள்ளார், தேநீர் பிரியான துணை ஆய்வாளர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக...
“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல், வால்வாட்ச்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, ''இந்த இணைய தொடர் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாகப் பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூ, 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதையைச் சொன்னவுடன் எங்களுக்குப் பிடித்தது. அதிலும் அந்தக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலு...
“வதந்தி 2: உண்மையைத் தேடி” – சசிகுமார்

“வதந்தி 2: உண்மையைத் தேடி” – சசிகுமார்

OTT, Web Series
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள 'வதந்தி சீசன் 2 - தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி இணை தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக உருவாகியுள்ள வதந்தி சீசன் 2, ஆகஸ்ட் 7 அன்று வெளியாகிறது. மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேஸான் ப்ரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழு...