ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில், ஆஸ்கர் விருதினைப் பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண் - உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்தக் காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளி என்ற சாதனையும் படைத்திருக்கிறது.
உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பதால் உலக நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம்சரண் மற்றும் அவரது அன்பும் அழகும் நிறைந்த மனைவி உபாசனா என இருவரும் வாழ்க்கையின் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றான ஆஸ்கர் விருதிற்கு கலந்து கொள்ளும் தருணங்கள், இந்தக் காணொளியில் இடம் பிடித்திருக்கிறது. ஆஸ்கர் விருது நிகழ்வில் அவரது நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான 'நாட்டு நாட்டு..' எனும் பாடலுக்காக ஆஸ்கர் விருத...