Shadow

ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில், ஆஸ்கர் விருதினைப் பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண் – உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்தக் காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளி என்ற சாதனையும் படைத்திருக்கிறது.

உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பதால் உலக நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம்சரண் மற்றும் அவரது அன்பும் அழகும் நிறைந்த மனைவி உபாசனா என இருவரும் வாழ்க்கையின் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றான ஆஸ்கர் விருதிற்கு கலந்து கொள்ளும் தருணங்கள், இந்தக் காணொளியில் இடம் பிடித்திருக்கிறது. ஆஸ்கர் விருது நிகழ்வில் அவரது நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான ‘நாட்டு நாட்டு..’ எனும் பாடலுக்காக ஆஸ்கர் விருதினை வென்றது.

அந்தக் காணொளியில், அறை ஒன்றில் உபாசனா மீது வாசனை திரவியத்தை ராம் சரண் தெளிக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து உரையாடிக் கொள்ளும் தருணங்கள் இயல்பான த்வனியில் அமைந்திருக்கிறது. அவர்களது தங்கும் இடங்களை நாமும் சுற்றிப் பார்க்கிறோம். அங்கு அவர் தங்களது சிறிய மத அடையாளங்களைக் காண்பிக்கிறார். அது அவர்களது வலுவான நம்பிக்கைகளுக்கு சான்றாக இருக்கிறது. ராம் சரண் தயாராகியதும், அவரது வசீகரமும் சாதுர்யமும் முழுமையாகப் பளீச்சிட்டு, அவர் மீதான நம் அன்பை அதிகரிக்கிறது. இதனிடையே உபாசனா தனது பாரம்பரிய ஆடையான சேலையை நேர்த்தியாக உடுத்திக் கொண்டு, சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகளை மேற்கொள்வது காண்பிக்கப்படுகிறது.

இருவரும் அவர்களது அறைகளிலிருந்து வெளியே வரும்போது, சிவப்பு கம்பளம் தயாரான நிலையில், யாரும் தவறவிட முடியாத அற்புதமான தருணங்களை வரலாற்றை உருவாக்குகிறார்கள்.

இந்தக் காணொளியின் வெற்றி, ராம்சரண் அபரிமிதமான புகழ் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீது ரசிகர்கள் காட்டும் ஈர்ப்பிற்குச் சான்றாகும். மில்லியன் கணக்கிலான பார்வைகளைக் கடந்திருப்பது அவரது நட்சத்திர பிம்பத்தின் மீதான அந்தஸ்த்திற்கும், கவர்ச்சிக்கும் எல்லையே இல்லை என்பது உறுதியாக்குகிறது. ராம்சரண் தொடர்ந்து பொழுதுபோக்கு துறையில் பல தடைகளை உடைத்துப் புதிய சாதனைகளை படைத்து வருகிறார். ஆடை அலங்கார கலைமீது ராம் சரண் கொண்டிருக்கும் ஈடுபாடு, அவரது இயல்பான வசீகரத்திற்கும் தனித்துவத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது. உலகளாவிய பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருவதால், அவருடைய அடுத்த கட்ட முயற்சி குறித்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது. அவருடைய புதிய பதிவுகளுக்காக பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ராம்சரனும், அவரது மனைவி உபாசானவும் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் காணொளி நிறைவடைகிறது.