Shadow

Tag: Venom

வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
மூன்று பாகங்கள் கொண்ட 'வெனம்' படத்தொடரின் கடைசிப் படமான, "வெனம்: தி ளாஸ்ட் டான்ஸ்" அக்டோபர் 25 அன்று வெளியாகிறது. மரணம் வரை பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்துள்ள எடி ப்ரோக்கையும் வெனத்தையும், பூமியைச் சேர்ந்தவர்களும், வேற்றுலக சிம்பயாட்களும் வேட்டையாடுகிறார்கள். இந்தியாவில், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.  ஆங்கில ட்ரெய்லர்: https://youtu.be/MbIoY50ZOxg...
வெனம் விமர்சனம்

வெனம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
உலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்புகிறார் லைஃப் ஃபெளண்டேஷனின் கார்ல்டன் ட்ரேக். சமீபமாய் ஹாலிவுட் வில்லன்கள் அனைவரையுமே இந்த பயம் ஆட்டுவிக்கிறது. அவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். முதல் வகையினர், மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டால், பூமி பழையபடி பூத்துக் குலங்கத் தொடங்கிவிடும் என நம்புவர்கள். இன்னொரு சாரார், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பூமியை விட்டே போய்விடுவது என நம்புவர்கள். கார்ல்டன் ட்ரேக், இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த வில்லன். சரி, பூமியை விட்டு வெளியில் போய்விட்டால் போதுமா? மனிதர்கள் விண்வெளியில் வாழ அவர்களின் உடலினை, அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைக்க வேண்டுமா? அதனால் விண்கல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும் நான்கு கூட்டுயிரிகளை (Symbiote) ஆய்வு செய்கிறார். மனிதரோடு கூட்டுச் சேராமல், அவ்வுயிரிகள் கார்ல்டன் ட்ரேக்கிற்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, ஒரு விபத்து போல் எடி ப...
வெனம் – யார் இந்த சூப்பர் ஹீரோ?

வெனம் – யார் இந்த சூப்பர் ஹீரோ?

அயல் சினிமா, சினிமா
மார்வெல் காமிக்ஸில் அதி நாயகர்களுக்குப் பஞ்சம் கிடையாது. அப்படியொரு அதி நாயகனைத் திரையேற்றுகின்றனர் சோனி - மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் (Sony - Marvel Cinematic Universe). இது அவர்களது முதல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதி நாயகன் வெனம் பாத்திரத்தின் பூர்வாங்கத்தை அறிய 2007 இல் வெளிவந்த ஸ்பைடேர்மேன் 3 படத்தினை நினைவுகூருவது அவசியம். அப்படத்தின் தொடக்கத்தில், நியூயார்க் நகரின் மத்திய பூங்காவில் ஒரு விண்கல் விழும். அதிலிருந்து ஊர்ந்து வரும் ஒரு வேற்றுக்கிரக உயிரி ஸ்பைடர்மேனை ஆட்கொள்ளும். அந்த உயிரியை, “கூட்டுயிரி (Symbiont)” என அழைக்கலாம். அதவாது அவ்வுயிரிக்கு ஒரு உடல் தேவை. எந்த உடலோடு கூட்டுச் சேர்கிறதோ, அந்த உடலுக்கு அளப்பரிய ஆற்றல்களைத் தருவதோடு, அந்த உயிரின் மனதில் உறைந்துள்ள இருண்ட பகுதியை வெளிக்கொணர்ந்துவிடும். தன்னுள் வன்முறை மிகுவதை உணரும் ஸ்பைடர்மேன், அந்த வேற்றுக்கிரக ...