Shadow

Tag: Vijayanand review

விஜயானந்த் விமர்சனம்

விஜயானந்த் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கன்னடத் திரையுலகின் முதல் சுயசரிதை படம் (பயோபிக்). ஒரு லாரியை 5036 லாரிகளாக மாற்றிய ஒரு பெரும் தொழிலதிபரின் வெற்றிப் பயணமே இப்படம். வெற்றியும் மகிழ்ச்சியும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து உழைப்போருக்கு எப்படியும் சாத்தியப்பட்டுவிடும் என நம்பிக்கையை விதைக்கிறது தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை. ஓர் அடி எடுத்து வைக்க நினைத்தால் ஐந்து அடி பின்னால் தள்ளக் காத்திருக்கும் வியாபார உலகில், குடும்பத் தொழில் விட்டுவிட்டு புதிய தொழிலில் காலில் வைக்கும் விஜய் சங்கேஷ்வரின் அதீத்த்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அது அத்தனை சுலபமல்ல எனத் தெரிந்தும், எது அவரை விடாப்பிடியாக அத்தொழிலில் கட்டிப் போட்டது என்பதற்கான அழுத்தமான பதில் இல்லாதது குறை. மிகப் பிரயத்தனப்பட்டுக் கிடைக்கும் முதல் சவாரியில், லாரியின் ஒரு பின்சக்கரம் பாளம் பாளமாக வெடித்துப் பழுதாகிவிடுகிறது. அந்த முதல் சவாலை அவர் எப்படிச் ச...