ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு.
முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, 'ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்ஷன் படம் ஒன்றினை இருவரும் இணைந்து எடுக்கப் பேசி வந்த நிலையில், 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்திற்காகத் தன் அனைத்து வேலையையும் ஓரங்கட்டி விட்டு இந்தியா வந்துள்ளார் க்ரெக்.
அறுபதுகளுக்குப் பின்னான சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் கம்மியாகக் காணப்படுவதாக ஓரெண்ணம் ரதீந்தரனுக்கு. ரோப் கட்ட...