Shadow

Tag: Zero Degree Publishing

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

மற்றவை
ஜீரோ டிகிரி என்பது சாரு நிவேதிதாவின் மிகப் புகழ் பெற்ற நூலாகும். அப்புத்தகத்தின் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் இணைந்து தொடங்கியுள்ளனர் திருமதி காயத்ரி ராமசுப்ரமணியமும் ராம்ஜி நரசிம்மனும். இப்பதிப்பகத்தின் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திலுள்ள கலையரங்கில் ஜனவரி 18 அன்று நடைபெற்றது. அறிமுக விழாவில், சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டனர். இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், மதன், பாஸ்கி, கவிதா சொர்ணவேல், ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக, கஞ்சிரா கலைஞர் ஹரீஷ்குமார் அவர்களின் தலைமையிலான...
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

புத்தகம்
Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்கு உகந்த தரம் மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையைத் தரும் விஷயம். இக்குறையைப் போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே “ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)” ஆகும். சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை ப்ரபாகர், மதன் ஆகியோருடைய புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு முதற்கட்டமாக வெளிவர இருக்கின்றன. இந்திரா செளந்திரராஜன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் நாவல்கள் மொழிபெயர்ப்பில் உள்ளன. சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ல.ச.ரா, கு.அழகிரிசாமி, புதுமைப்ப...