32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

Dinesh R சேலம் Published: 19/01/2018 1 நிமிட வாசிப்பு புத்தகம்
எழுத்து அளவு:

Zero Degree Publishing

Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்கு உகந்த தரம் மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையைத் தரும் விஷயம்.

இக்குறையைப் போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே “ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)” ஆகும். சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை ப்ரபாகர், மதன் ஆகியோருடைய புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு முதற்கட்டமாக வெளிவர இருக்கின்றன. இந்திரா செளந்திரராஜன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் நாவல்கள் மொழிபெயர்ப்பில் உள்ளன.

சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ல.ச.ரா, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் ஆகியோரின் சிறுகதைகளும் விரைவில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவிருக்கின்றன.

தமிழ் எழுத்தாளர்களை மட்டுமல்லாது, ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மற்ற இந்திய மொழிகளில் எழுதும் படைப்பாளிகளையும் கூடிய விரைவில் ஆங்கிலத்தில் எடுத்துச் செல்ல இருக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.