Search

த ஸ்டீலர் – ரோஷோமோன் பாணி திரைப்படம்

த ஸ்டீலர் எனும் படத்தை இயக்கியுள்ள ஜெகதீஸ் கண்ணா, ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். ஜகதீஸ் மேடை நாடக நடிகராகவும், “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” மற்றும் “திரைகடல்” படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நாடகக்கலை மூலம் வானியல் & விமான அறிவியலைக் கற்பிக்கும் நிறுவனமான “வாயு-சாஸ்திரா”வின் இயக்குநர் ஆவார்.

2017 முதல் ஜகதீஸ் நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கதை கூறி முயற்சி செய்தவாறு இருக்க, நடிகர்கள் தேதிகள் இருந்தும் திரைக்கதவுகள் திறக்காமல் தள்ளிக்கொண்டே போக, தானே சிறிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்க முடிவு செய்து ஸ்டீலர் கதையை எழுதினார்.

தன் வாழ்வில் நடந்த “லேப்டாப் திருட்டு” சம்பவத்தை மையாக வைத்து எழுதிய கதை. திருட்டு நடந்த நேரம், வீட்டில் எட்டு நண்பர்கள் இருந்தனர். போலீஸ் எட்டு பேரையும் விசாரிக்க, அதைப் பார்த்த ஜெகதீஸின் மனதில் கதையின் கரு உருவானது. அச்சம்பவத்தை ஒரு கார்பரேட் ஆபிஸில் நடப்பது போல் மாற்றி, ரோசமோன் படம் போல் “பெர்ஸ்பெக்டிவ்” திரைக்கதை வடிவில் இப்படத்தைத் தயாரித்து முடித்தார் ஜெகதீஸ்.

நண்பர்களான ‘மாஸ்டர், ‘டாக்டர்’ புகழ் பியான் சரோ, மற்றும் துப்பறிவாளன், சைக்கோ படத்தின் எடிட்டர் அருண், இசை மற்றும் படத்தொகுப்பில் உதவினர். மேடை நாடகத்துறை சார்ந்ததால் திறமை வாய்ந்த நடிகர்கள் விக்னேஷ், சிவா, கோபிநாத், பொன்னி, ஶ்ரீனிவாஸ், ஹர்ஷிதா போன்றோர் நடித்துள்ளனர். தனது ஆபிஸில் முழுப்படத்தை எடுக்க ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்கும் உதவி செய்ய, முழுப் படத்தையும் முடித்தார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிய ஆறு மாதங்கள் ஆனது.

படம் முடிந்து ரிலீஸ் சம்மந்தமாக நிறைய புரொடக்ஷன்களைக் கேட்டு, 4-5 மாதங்கள் கடக்க இறுதியில் தானே தனது வாயு-சாஸ்திரா சேனலில் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

THE STEALER (Independent Feature Film – 1 Hr 50 Min)

Writer & Director – Jagadeesh Kanna G
Music – Bjorn Surrao & Arul Danie
Cinematography – Sivananth
Edit Supervisor – Arun
Editor – Arul Kumaran N
Production house – Vaayusastra Aerospace