32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

யோகிபாபு, இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

Dinesh R சேலம் Published: 20/11/2022 2 நிமிட வாசிப்பு Updated: 21/11/2022 சினிமா
எழுத்து அளவு:

மிகச் சில நகைச்சுவை நடிகர்கள்தான் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நகைச்சுவை வேடங்களில் மட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும் நன்றாக நடிக்கக் கூடியவர் யோகிபாபு. நாயகனாகவும் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதே போல், யோகிபாபு கதையின் முக்கிய பாத்திரமாக நடிக்க இருக்கும் புதியப் படத்திற்கு ‘தூக்குதுரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

அட்வென்ட்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். ’தூக்குதுரை’ திரைப்படம் ‘PRE’ (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது. மூன்று மாறுபட்ட காலங்களில், அதாவது 19ஆம் நூற்றாண்டு, 1999 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.

யோகிபாபுவுடன், இனியா கதாநாயகியாக நடிக்கிறார். மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பாலசரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்குநர் – டென்னிஸ் மஞ்சுநாத்
ஒளிப்பதிவு – ரவி வர்மா கே
இசை – கே.எஸ். மனோஜ்
படத்தொகுப்பு – தீபக் எஸ் துவாரக்நாத்
கலை – ஜெய் முருகன் மற்றும் பாக்கியராஜ்
சண்டை – மான்ஸர் முகேஷ் & ராம்குமார்
பாடல்  – அறிவு & மோகன்ராஜன்
நடனம் – ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பு – நிவேதா ஜோசப்
காஸ்ட்யூமர் – பாலாஜி
ஒப்பனை – ஏ.பி. முகமது
Effects & Logics (VFX) – அரவிந்த்
நடிகர்கள் தேர்வு (Casting) – ஸ்வப்னா ராஜேஷ்வரி
படங்கள் – சாய் சந்தோஷ்
மக்கள் தொடர்பு – D’One
விளம்பர வடிவமைப்பு – சபா டிசைன்ஸ்
தயாரிப்பு மேலாளர் -மனோஜ் குமார்
தயாரிப்பு நிர்வாகி – பாலாஜி பாபு எஸ்
நிர்வாகத் தயாரிப்பாளர் –ஜெயசீலன்
இணைதயாரிப்பு – வினோத் குமார் தங்கராஜூ

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.