
ஏனோ தெய்வம் சதி செய்தது!?
இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் எவரும் சுப்பிரமணியை மறந்திருக்க வாய்ப்பில்லை.கமல், பாலு மகேந்திரா ஆகிய இருவருக்குமே தேசிய விருதினைப் பெற்றுத் தந்த படம். அப்பொழுது கொண்டாடப்பட்ட படங்கள் பலவும் இன்று பார்க்க நகைப்புக்குரியதாய்த் தோன்றுகிறது. ரசனைகளின் மாற்றத்தால் நிகழும் புரிதல்கள் இவை. ஆனால் அன்று போல இன்றும் ரசனை மாற்றங்களையும...








