Shadow

அக்டோபர் 7 – ரெமோ

Remo release when?

‘ரெமோ’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த கதைக்களம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. மேலும், அனிருத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள ‘ரெமோ சிக்நேச்சர் தீம்’ மற்றும் ‘செஞ்சிட்டாளே’ பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

“எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும் வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ, அதே போல் தான் எங்கள் ரெமோ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் அயராத உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் கிடைத்த பலனாக தான் இதை நாங்கள் கருதுகிறோம். இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு பெரும் மகிழ்ச்சி எந்த விதத்திலும் அமையாது. எல்லா மொழிகளையும், மதங்களையும் தாண்டி, அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக செயல்படுவது அன்பு தான். ரசிகர்கள் ரெமோ படத்தின் மீது காட்டி வரும் அன்பிற்கு சிறிதளவு கூடக் குறையில்லாமல் இருக்கும், அவர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் ரெமோ படம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர். டி. ராஜா.

திரையரங்குகளில் ரஜினிமுருகன் கொண்டாடப்பட்டது போலவே, ‘தசரா’ விடுமுறை நாட்களில் குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகிறது ‘ரெமோ’ திரைப்படம்.