Shadow

Tag: Remo

ரெமோ லட்டு

ரெமோ லட்டு

சினிமா, திரைச் செய்தி
"என்னை இந்தப் படத்தில் நாயகியா நடிக்க வச்சா சரியா பொருந்தும்னு பரிந்துரை செய்தது பி.சி.ஸ்ரீராம் சார் தானென பாக்கி (பாக்கியராஜ் கண்ணன்) சொன்னார். அவருக்கு ரொம்ப நன்றி. எங்கப்பாம்மா என்னைச் சுலபத்தில் பாராட்டிட மாட்டாங்க. ஆனால், திரையரங்கில் ரெமோ பார்த்துட்டு “லட்டு மாதிரி இருக்க!” எனப் பாராட்டினாங்க. இந்தப் பாராட்டு, பி.சி.ஸ்ரீராம் சாரோட கேமிரா மேஜிக்கால் தான் நடந்தது” என்றார் ரெமோ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். “என்னிடம் படத்தைப் பற்றிப் பேசுறவங்க, அந்த பிங்க் சேலையில் ரொம்ப அழகா இருந்தீங்க. எங்க வாங்குனீங்க எனக் கேட்கிறாங்க. ‘அடப்பாவிகளா! அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி மேடமைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அக்கறையாகப் பார்த்துப் பார்த்து எனக்கு எது நல்லாயிருக்கும்னு உடை வடிவமைத்துக் கொடுத்த அவங்களுக்கு நன்றி. யாராச்சும் நான் அழகுன்னு சொன்னா ந...
ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

சினிமா, திரைச் செய்தி
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். “பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா! நாலாவது மைக்கும் இருக்கா?’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெரிஞ...
ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும் முயற்சியிலுள்ள எஸ்.கே. காதலில் வெற்றியடைய வேலையில்லா எஸ்.கே. எடுக்கும் தொடர் முயற்சிகள் தான் படத்தின் கதை. வழக்கமான ரோட் சைட் ரோமியோ தான் எஸ்.கே.வும். எதைப் பார்த்து ‘லவ்’ வந்தது என தமிழ்ப்பட நாயகனிடம் கேட்டால், ‘முகத்தைப் பார்த்து லவ் பண்ணலை. மனசைப் பார்த்து லவ் பண்ணேன்’ எனச் சொல்வார்கள். ‘ஏன் லவ் ஃபெயிலியர் ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இந்தப் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கவே முடில’ என பாரில் (Bar) பெண்களைத் திட்டிப் பாட்டு பாடுவார்கள். முதலில் என்ன புரிந்ததோ, பின் என்ன புரியாமல் போனதோ?? தமிழ்ப் பட இயக்குநர்களுக்கே வெளிச்சம்! ஆனால், இப்படத்தில் எஸ்.கே.விற்குக் காவ்யாவின் முகத்தைப் பார்த்தோ, மனதைப் பார்த்தோ காதல் வருவதில்லை. மன்மதன் (Cupid) அம்பெய்து காதல் வரச் செய்து விடுகிறார். அதுவரை பெண்கள் விஷயத்தில் எஸ்.கே. சின்னத் தம்பி பிரபு போல...
ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

சினிமா, திரைத் துளி
ரெமோ மிகப் பெரும் வெற்றியைப் பெரும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது படக்குழு. பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. "ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்தப் படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளி நாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. இது நம்முடைய வாழ்க்கை!! எந்தவித அச்சமும் இன்றி இதைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து வழி வகைகளையும் நாம் உருவாக்க வேண்டும்” என்று கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திரைப்படத் தயாரிப்புத் துறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண...
ரெமோ – படக்குழுவினர்

ரெமோ – படக்குழுவினர்

சினிமா, திரைத் துளி
நடிகர்கள்: >> சிவகார்த்திகேயன் >> கீர்த்தி சுரேஷ் >> சரண்யா பொன்வண்ணன் >> 'நான் கடவுள்' ராஜேந்திரன் >> யோகிபாபு >> நரேன் >> கல்யாணி நடராஜன் >> அன்சன் பால் >> பேபி ரக் ஷா >> பிரதாப் போத்தன் >> கே.எஸ்.ரவிக்குமார் >> மெளலி >> மயில்சாமி >> சுவாமிநாதன் பணிக்குழு: >> தயாரிப்பு நிறுவனம் - 24 ஏஎம் ஸ்டுடியோஸ் >> தயாரிப்பு - ஆர்.டி.ராஜா >> இயக்கம் - பாக்கியராஜ் கண்ணன் >> ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம் >> இசை - அனிருத் >> சவுண்ட் டிசைனர் - ரசூல் பூக்குட்டி >> படத்தொகுப்பு - ரூபன் >> கலை - T.முத்துராஜ் >> நடனம் - ராஜு சுந்தரம், பிருந்தா >> சண்டை - அனல் அரசு >> போஸ்டர் டிசைன் - டூனி ஜான் >> உடை வடிவமைப்பு - அனு பார்த்தச...
அக்டோபர் 7 – ரெமோ

அக்டோபர் 7 – ரெமோ

சினிமா, திரைத் துளி
'ரெமோ' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த கதைக்களம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. மேலும், அனிருத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள 'ரெமோ சிக்நேச்சர் தீம்' மற்றும் 'செஞ்சிட்டாளே' பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. "எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும் வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ, அதே போல் தான் எங்கள் ரெமோ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டுமொத்த படக்க...
சிங்கையில் ரெமோ

சிங்கையில் ரெமோ

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கும் ரெமோ, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், புதுமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும், அனிருத் இசையமைத்த 'ரெமோ நீ காதலன்' பாடலும் கடந்த வியாழன் அன்று சென்னையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. பிரம்மாண்டத்தின் மறு ரூபமான இயக்குநர் ஷங்கர் தலைமை தாங்கிய இந்த விழாவானது, ஒட்டுமொத்த திரையுலகக் கண்களையும் 'ரெமோ' மீது திரும்புமாறு செய்திருக்கிறது. இப்படி ஒரு பாடலின் வெளியீட்டையே, மிகப் பிரம்மாண்டமாக வெகு விமரிசையாகக் கொண்டாடிய படக்குழுவினர், வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி சிங்கப்பூரிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த உள்ளனர். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இடையே வெகு பிரபலமான சிவகார்த்திகேயனுக்கு அங்கு சிறப்பான வரவேற்புக்குக் காத்துக் கொண்டிருக்கிறது. 'ரெமோ' திரைப்படத்தின் மற்றொரு பாடலான ‘...
ரெமோவுடன் இணையும் ராஜா

ரெமோவுடன் இணையும் ராஜா

சினிமா, திரைத் துளி
இன்னும் ரஜினிமுருகன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தனது அடுத்த படத்திலும் அந்த இமேஜைத் தக்க வைக்க அவ்வெற்றி கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் ‘ரெமோ’ என தனது அடுத்த படத்தின் தலைப்பை ஈர்ப்பாக வைத்து விட்டு, படப்பிடிப்பிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். “இந்த வருட, பருவ மழையின் தொடக்கத்தின் பொழுதே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில், படத்தை முடிக்கும் முனைப்புடன் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தனது இளம் குழு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி வருகிறார்” என மகிழ்ச்சியாகச் சொன்னார் 24 ஏஎம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர்.டி.ராஜா. ரெமோ குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விசாகப்பட்டினம் கிளம்ப ஆயுத்தமாக உள்ள சூழலில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது அடுத்த தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர். “நன்றாகத் தொடங்கப்ப...