Shadow

நாட்டு கோழி குழம்பு

வணக்கம்,

IMG_20181021_111704 IMG_20181021_112021

மழை பெய்யுது,,,, குளிரும் சேர்ந்திருச்சே.. நல்லா காரசாரமா, நாட்டுகோழி குழம்பு சாப்பிட்டா எப்படி இருக்கும்????

 

தேவையான பொருட்கள்:

IMG_20181021_111800 IMG_20181021_111830

நாட்டுக்கோழி – 1 கிலோ

தக்காளி – 1 (நறுக்கியது)

பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்) + 2 பூண்டு

கறிவேப்பிலை – கைப்பிடி

சின்ன வெங்காயம் – 1 கப் + 1 கப்

கறி மசாலா தூள் – 2 கரண்டி

நல்லெண்ணெய் – 2 கரண்டி + 2 ஸ்பூன்

மிளகாய் – 2

 

செய்முறை:

Step 1:

 

IMG_20181021_085742 IMG_20181021_085920 IMG_20181021_092930 IMG_20181021_093233

பாத்திரத்தில், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு,  2 பூண்டு போட்டு வதக்கவும்.  1 கப் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். ஆறிய பிறகு, மிக்சியில் வதக்கிய வெங்காயம், கறிமசாலா தூல் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்

Step 2:

IMG_20181021_111859 IMG_20181021_111916 IMG_20181021_111944

பாத்திரத்தில், 2 கரண்டி நல்லெண்னெய் விட்டு, தட்டி வைத்த பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, 1 கப் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, மிளகாய் போட்டு ஒரு 2நிமிடம் வதக்கவும்.

Step 3:

IMG_20181021_105614

சுத்தம் செய்து வைத்த, கோழி கறியை போட்டு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.

Step 4:

IMG_20181021_111649 IMG_20181021_111704

அரைத்து வைத்த மசாலாவை கொட்டி கிளரவும். தேவையான அளவு, தன்ணீர் விட்டு, மூடி போட்டு வேக விடவும்.

Step 5:

IMG_20181021_111721 IMG_20181021_111736

நாட்டு கோழி என்பதால், கூடுதல் நேரம் பிடிக்கும். குக்கரில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கவும்.

IMG_20181021_112021

சுவையான கோழி குழம்பு…

 

  • வசந்தி ராஜசேகரன்