Shadow

(வால்) பூந்தி மிச்சர்

வணக்கம்,

IMG_20181101_153603 IMG_20181101_153511

 

எப்பவும் வட்ட பூந்தி மிச்சர்  சாப்பிட்டு போர் அடிச்சு போய், இந்த தடவை வால் பூந்தி மிச்சர் செய்தோம்.. எல்லாம் எங்க வீட்டு வாலுங்களோட வேலை.. 🙂 .. ஒன்னும் வித்யாசம் இல்லீங்க,, பூந்தி வட்டத்துக்கு பதிலா வால் வாலா இருக்கும்..  ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு பலகாரம்… அரை கிலோ மாவுக்கு, 1 சம்படம் வந்திருச்சு. கடையில் வாங்கி, சுத்தமா செய்தாங்களா, கலப்பட எண்ணெய்யா, கம்மியா இருக்கே இப்படி யோசிப்பதை விட்டு, நாமே செய்யறது நல்லது. இது மிக சுலபமானதும் கூட.

தேவையான பொருட்கள்:

IMG_20181101_153325

  1. கடலை மாவு – 1/2 கிலோ
  2. அரிசி மாவு – 50 கிராம்
  3. எண்ணெய் – பொரிக்க
  4. பூண்டு – 1 கட்டி
  5. கறிவேப்பிலை – 1 கொத்து
  6. அவுல் (எண்ணெயில் பொரித்தது)-  1 கப்
  7. நிலக்கடலை (வறுத்தது) – 1 கப்
  8. உப்பு, மிளகாய் பொடி- தேவைக்கு

 

 

செய்முறை:

step 1:

IMG_20181101_153210 IMG_20181101_153110

1/2 கிலோ கடலை மாவையும், ஒரு கப் (50 கிராம்) அரிசி மாவையும்,  தோசைமாவு பதத்திற்கு கரைத்துகோங்க. ரொம்ப தண்ணி மாதிரியும் இருக்க கூடாது

step 2:

IMG_20181101_153234 IMG_20181101_153251

சாதா அரிக்கியில் ஊற்றி தேய்ச்சால் வட்டமா வரும். அரிக்கி ஓட்டையில் நல்ல நீண்டு இருக்கிற அரிக்கியில் மாவை ஊற்றி தேய்ச்சால், நல்லா மெல்லிசா வால் வாலா வரும். நல்ல எண்ணெய் காய்ஞ்சதும், பூந்தி சேய்ச்சு விடுங்க. நல்லா மொறு மொறுன்னு வேகவிட்டு எடுத்து பாத்திரத்தில் கொட்டுங்க.

step 3:

IMG_20181101_153356 IMG_20181101_153413

நிலக்கடலையை வறுத்துக்கோங்க. அடுத்து கறிவேப்பிலை,  தட்டி வச்ச பூண்டை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்குங்க. நல்லா, பொரிஞ்சு, பூண்டு மணக்கனும்.

step 4:

IMG_20181101_153511

இப்போ, வறுத்த நிலக்கடலை, பொரித்த அவுல், பூண்டு கறிவேப்பிலை எல்லார்த்தையும், வால் பூந்திக்குள்ள போடுங்க.இப்போ தேவையான உப்பு, மிளகாய்தூள் போட்டு கிளருங்க. அவ்வளவுதான்…

IMG_20181103_111557

சுலபமான, பூந்தி மிச்சர் … எண்ணெய் அதிகமா இழுக்காது, நல்லா மொறு மொறுன்னு இருக்கும்.

 

 

  • வசந்தி ராஜசேகரன்