பெற்றோர்களை பிரிந்து இருந்த ஏக்கம் தானோ என்னவோ ,சராசரி குழந்தையை போல் அல்லாமல் ஏதோ ஒரு வேற்று உலகில் வாழ்வது போல் இருப்பாள். படிப்பிலும் கொஞ்சம் மந்தம் தான்.அவளது ரேங்க் கார்டில் சிகப்பு மை பேனாவினால் எழுதபட்டிருந்த “NIL” என்பது என்ன என்று கூட புரியாது இருந்தாள்.
சரவணன் அழத் தொடங்கினான். அப்பொழுது தான் அவள் பார்வை தம்பியின் மீது திரும்பியது. சரவணனுக்கு இரண்டு வயது தான் ஆகிறது. அவள் தன் தம்பியுடனும் அதிக நாட்கள் கழித்ததில்லை. அதனால் தானோ என்னவோ அவன் மேல் மிகுதியான பாசம் அவளுக்கு.
அவனை தூக்கிக்கொண்டு கொஞ்ச நேரம் சுற்றி வந்தாள். ஆனால் அவன் அடம் பிடித்ததின் கா
அம்மாவின் பின்னாடியே கொஞ்ச
“என்னங்க,கொழந்தைக்கு உடம்பு சுடுதுங்க.காய்ச்சலா என்னன்னு தெரியல? தண்ணி எதாவது ஒத்துக்கலையா?? இதுக்கு தான் இவள வந்து பார்க்க வேணாம் அப்படியே ஊருக்கு போயிடலாம்ன்னு சொன்னேன்.இப்போ பாருங்க யார் தூக்கிட்டு அலையறது ஹாஸ்பிடலு
வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.
அம்மாவும் அப்பாவும் தம்பியுடன் ஊருக்கு செல்ல தயாராகி பேருந்து நிறுத்ததிற்கு புறப்பட்டனர். வீதியில் அவர்கள் நடந்து செல்ல அவர்கள் பின்னால் அழுதுக் கொண்டே ஓடத் தொடங்கினாள் சீதா. அவள் விழித்துக் கொண்டதை யாரும் கவனிக்கவே இல்லை.
என்ன செய்தாலும் இப்பொழுது சமாதனம் செய்ய முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்த அவள் அத்தை, அவளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
அவள் கதறிக்கொண்டே இருக்க அவர்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந்துக் கொண்டிருந்தனர்.
அம்மாவின் தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த சரவணன், அவன் அக்கா அழுவதை பார்த்து சிரித்தான். பாவம் அவனுக்கு எங்கே தெரியும் இது விளையாட்டல்ல என்று!!


