32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“வெற்றி பெற்றும் சப்பாணியாகப் பார்க்கப்படுகிறேன்” – வருத்தத்தில் சீனு ராமசாமி

Dinesh R சேலம் Published: 19/02/2019 2 நிமிட வாசிப்பு Updated: 08/04/2019 சினிமா
எழுத்து அளவு:

Kanne-Kalaimaane---Seenu-Ramasamy

‘கண்ணே கலைமானே’ படத்தின் பத்திரிகயாளர் சந்திப்பில், “தர்மதுரைக்கு பிறகும் ஒரு நல்ல கதையைச் சொல்லி என்னால் யாரையும் ஒப்புக் கொள்ள வைக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா சப்பாணியாகப் பார்க்கப்பட்டேன். தர்மதுரை அவ்வளவு வெற்றி பெற்றும் எனக்கு இந்த நிலைமை. விஜய் சேதுபதி திரும்பி வந்து ஒரு வாய்ப்பினை வழங்கும் வரை எனக்கு எந்த ஒரு நல்ல வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களால் உடனடியாகப் படப்பிடிப்பைத் துவங்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் வேறு கதைகளை எழுதும் வாய்ப்பு அமைந்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பின்னர் நான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தை ஏற்றுக் கொண்டதற்காக உதயநிதி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு அற்புதமான நடிகர், ஒரு 10 யதார்த்தமான படங்களில் அவர் நடித்தால் போதும், அவரை யாராலும் அசைக்க முடியாது. தொடக்கத்தில், எங்களுக்குள் சில மாறுபட்ட கருத்துகள் இருந்தன, ஆனால் படிப்படியாக நாங்கள் அதை சரி செய்தோம். ஒரு தயாரிப்பாளராக, அவர் அதிக பட்ஜெட் எடுத்துக் கொள்ளச் சொல்வார். ஆனால் நான் இதை ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடிக்க விரும்பினேன். என் திரைப்படம் யாரையும் ஏமாற்றாது என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமன்னா – ஒரு நல்ல ஆன்மா.

வேறென்ன அவரைப் பற்றிச் சொல்ல? அவர் காட்சிகளைப் புரிந்து கொண்டு, உணர்ச்சி ரீதியாக மிகச்சிறப்பாக நடிப்பவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை பற்றிய ரெஃபரன்ஸ் ஒன்று படத்தில் இருக்கும். ஏனெனில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவான சிந்தனையுள்ள ஒரு சக்திவாய்ந்த பெண்ணின் கதாபாத்திரம்” என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.