32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிம்புதேவனின் ‘கசட தபற’

Dinesh R சேலம் Published: 27/05/2019 2 நிமிட வாசிப்பு Updated: 23/06/2019 சினிமா
எழுத்து அளவு:

kasadathapara-first-look

‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் பார்த்ததும் அது ஆன்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அதை மறுக்கும் இயக்குநர் சிம்புதேவன், “எங்கள் திரைப்படமானது இந்த வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆன்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்” என்றார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது, “ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் என ஒவ்வொருவருமே நடிப்பில் தனித்துவமான ஸ்டைலைக் கொண்டிருப்பவர்கள். கூடுதலாக, இவர்கள் யாருமே அவசர அவசரமாக எந்தப் படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கடுமையான முயற்சியை மேற்கொள்பவர்கள். தொழில்நுட்பக் குழுவைப் பற்றிச் சொல்வதென்றால், தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலமான அனைத்து கலைஞர்களும் பங்கு பெற்று இருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் போன்ற கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களுடன் ஜிப்ரான் மற்றும் சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள். கசட தபற குழுவுக்கு இது ஒரு மிகப்பெரிய வரம். இந்தக் கதையையும், முயற்சியையும் நம்பி அதைச் செயல்படுத்துவதற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்கள் வி. ராஜலட்சுமி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவிந்திரன் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. விரைவில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும், தொடர்ந்து ஜுலையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

கசட தபற படத்தை பிளாக் டிக்கட் கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்கள். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார் கலை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.