32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜி.எஸ்.எம்.இன் தேனாம்பேட்டை மகேஷ்

Dinesh R சேலம் Published: 18/08/2019 1 நிமிட வாசிப்பு Updated: 20/08/2019 சினிமா
எழுத்து அளவு:

Mahesh-And-Anisha

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் படப்பூஜை ஆகஸ்ட் 17 அன்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குநர் எம்.சித்திக் கூறும்போது, “எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்குத் தெரிய வருகிறது. அதன் பின் மகேஷின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும், பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்” என்றார்.

>> ஒளிப்பதிவு – முனீஷ்
>> இசை – ஸ்ரீ சாய் தேவ்
>> படத்தொகுப்பு– பாசில்
>> கலை – கார்த்திக்
>> நடனம் – தீனா
>> பாடலாசிரியர் – சிவசங்கர்
>> சண்டை – எஸ்.ஆர்.முருகன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.