32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஸ்பைடர்-மேன் 2021: பல்லண்டத்தில் இருந்து வரும் சூப்பர் வில்லன்கள்

Dinesh R சேலம் Published: 09/12/2021 2 நிமிட வாசிப்பு Updated: 25/01/2022 அயல் சினிமா
எழுத்து அளவு:

உலகமெங்கும் எதிர்பார்ப்பைக் குவித்த ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் (Spider-Man No Way Home) திரைப்படத்தின் டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முண்டியடித்ததால், திரையரங்கு இணையதளங்கள் முடங்கியது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (Avengers: Endgame) திரைப்படத்திற்குப் பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களைப் பித்துப்பிடித்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் திரைப்படம். உலகம் முழுதும் 2021 டிசம்பர் 17 அன்று வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது.

மார்வல் திரையுலகத்தின் சூப்பர் ஹீரோ ஸ்பைடர்-மேன், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ளது இத்திரைப்படம். இப்படத்தில் டாம் ஹாலண்ட் சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும், அவருக்கு ஜோடியாக மிச்சேல் (MJ) பாத்திரத்தில் ஜெண்டாயாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய டாக்டர் ஸ்டீஃபன் ஸ்ட்ரேஞ்ச் பாத்திரத்தில் பெனிடிக்ட் கம்பர்பேட்ச் நடித்துள்ளார். இப்படம் மல்டிவெர்ஸ் எனும் வித்தியாசமான கான்செப்டில் பல உலகங்களை இணைக்கும் கதைக்கருவில் உருவாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன் வந்த ஸ்பைட-மேன் பட பாகங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் மீண்டும் வருகிறது. 10 வருடங்களுக்கு முன் ரசிகர்களின் கனவுகளை நிரப்பிய டாக்டர் ஆக்டேவியஸ், க்ரீன் கோப்லின், மற்றும் எலக்ட்ரோ பாத்திரங்கள் மீண்டும் இப்படத்தில் வருவது டிரெய்லரில் உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் மூன்று ஸ்பைடர் மேன் பாத்திரங்கள் வரவுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் உலகம் முழுதும் படத்திற்கு வரலாறு காணாத அளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் எப்போது டிக்கெட் இணையத்தில் வெளியாகும் என இரவு பகலாக கண்விழித்துக் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் இணையத்தில் திறக்கப்பட்டது. டிக்கெட் திறக்கப்பட்ட ஒரு சில வினாடி நேரத்திலேயே லட்சக்கணக்கில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தது. மேலும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கிலான ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் செய்ததால், பல இணையதளங்கள் முடங்கியது. பல திரையரங்கு டிக்கெட் புக்கிங் தளங்களும் முடங்கின. அதனை சரிசெய்யும் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரசிகர்களிடம் இப்படத்திற்கு பிரமாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்பைடர்-மேன் திரைப்படம் இந்தியா முழுவதும் 2021 டிசம்பர் 16 அன்று தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல ழொழிகளிலும் வெளியாகிறது. இந்தியாவிலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.