32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தூநேரி விமர்சனம்

Dinesh R சேலம் Published: 24/12/2021 1 நிமிட வாசிப்பு Updated: 18/07/2022 சினிமா
எழுத்து அளவு:

அமானுஷ்ய கதைகள் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அப்படியான கொண்டாட்டங்களை ஏற்படுத்தவே தூநேரி படம் முயற்சி செய்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஊர்க்காலவனாக இருக்கும் கருப்பசாமி என்கிற ஜான் விஜய் ஒரு கட்டத்தில் ஊரார்களாலே கொல்லப்படுகிறார். பின் கொன்றவர்களைப் பேயாக மாறி பழி வாங்குகிறார். இப்படியான சம்பவம் நடக்கும் ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்தி நடக்கும் கொலைகளை எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு.

கருவிலேயே நடிக்கத் தெரியும் என்பது போல படத்தில் வெள்ளக்கனியாக வரும் சிறுவன் அபிஜித் அபாரமாக நடித்திருக்கிறான். ஜான் விஜய், கருப்பசாமி கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் இன்னும் கூட முனைப்போடு நடித்திருக்கலாம்.

ஒரு பேய் படத்திற்கான கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் அதற்கான விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்குவதில் கூடுதல் சிரத்தையைச் செலுத்தியிருக்கலாம் அறிமுக இயக்குநர் சுனில் டிக்ஸன். இவர், ஆக்கர் ஸ்டுடியோஸில் VFX இயக்குநராகப் பணியாற்றியவர். படத்தில் இடம்பெறும் சிஜி ஷாட்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மலை பிரதேசத்தில் நிகழும் கதை என்பதால், ஒளிப்பதிவாளர்கள் காலேஷும் ஆலெனும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என தங்கள் கேமராக்களின் வாயிலாக இயற்கையின் அழகை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

– ஜெகன் கவிராஜ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.