32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

OMG – சன்னி லியோனின் ஹாரர் காமெடி படம்

Dinesh R சேலம் Published: 06/04/2022 1 நிமிட வாசிப்பு Updated: 23/04/2022 சினிமா
எழுத்து அளவு:

சன்னி லியோன் நடிக்கும், வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் “ஓ மை கோஸ்ட் (OMG)” எனும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களில் சன்னி லியோன் தோன்றுகிறார். 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான R. யுவன், “இந்தப் படத்திற்காக, சன்னி லியோன் தனது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டார். OMG என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் சன்னி லியோன் பாத்திரத்திற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருப்பதால், அவரது தோற்றம் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது.

“ஓ மை கோஸ்ட் (OMG)” திரைப்படத்தினை VAU Media Entertainment சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் White Horse Studios சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். சதீஷ், தர்ஷா குப்தா முதலியவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவிலான திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.