32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

Dinesh R சேலம் Published: 20/12/2022 2 நிமிட வாசிப்பு Updated: 25/12/2022 Movie Posters
எழுத்து அளவு:

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால், ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து, அறிமுக இயக்குநர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மையான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார், பாடகர்கள் பிரதீப் குமாரும், சைந்தவியும் தங்கள் இனிமையான குரலில் பாட, அற்புதமான பாடல் காட்சிகளும் உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம். பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

90 காலகட்டங்களில் ஒரு ஹிட்மேன் ஆக வலம் வரும் கதாநாயகன், தன் வாழ்வில் சந்தித்த பெரும் இழப்பினால் அவை அனைத்தையும் விட்டுவிட்டு ஓய்வு காலத்தில் அமைதியான ஒரு தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். கதாநாயகன் மீண்டும், தன் வாழ்வில் ஓர் இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழல் நேரிடுகிறது. அந்த இழப்பைத் தவிர்ப்பதற்கு மறுபடியும் ஹிட்மேன் ஆக உருவெடுக்கிறார் கதாநாயகன் ஜாஸ்பர்.

இணையத்தில் வெளியாகி உள்ள ஜாஸ்பர் படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 23 ஆம் தேதி ஜாஸ்பர் திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.