Shadow

Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத்தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப்படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் வேஃபேரர் ஃபிலிம்ஸ்க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இப்படத்தின் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே வேஃபேரர் ஃபிலிம்ஸ் மாறியுள்ளது. இப்படத்தின் முக்கிய சிறப்பாகத் திகழ்வது இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும் எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி கொடுத்த காட்சிகள், இது உண்மையிலேயே ஒரு மலையாளப் படமா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு உலகத் தரத்தில் இருக்கின்றன. புரடக்சன் டிசைனர் பங்களன் மற்றும் ஆர்ட் டைரக்டர் ஜீது செபாஸ்டியன் சேர்ந்து இந்தப் படத்தின் அதிசயமிக்க, வண்ணமயமான, மர்மமிகு உலகை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், தனது பின்னணி இசையின் மூலம் படவுலகின் மர்மத்தையும் த்ரில்லையும் அழகாகக் கொண்டு வந்துள்ளார். சாமன் சகோவின் கூர்மையான படத்தொகுப்பு மற்றும் யானிக் பென் வழங்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தின் வெற்றியில் பங்காற்றிய முக்கிய அம்சங்களாகும். முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் தனது சிறப்பான நடிப்புக்காகப் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் தூண்டும் விதமாகப் படத்தை முடித்துள்ளனர்.

எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
உடை அலங்காரம் – மெல்வி ஜே. அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்
புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்
சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்