
பார்வதி நாயர் நடிப்பில் வரும் ‘உன் பார்வையில்’ எனும் ஓர் அதிரடியான த்ரில்லர் படம், டிசம்பர் 19 அன்று, தென்னிந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Sun NXT-இல் நேரடியாக வெளியாகிறது.
இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையைத் தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது.
தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணைப் பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோரின் வலுவான நடிப்பு ‘உன் பார்வையில்’ படத்தின் ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது.
நடிகை பார்வதி நாயர், “பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. டிசம்பர் 19 அன்று ‘உன் பார்வையில்’ படத்தை Sun NXT-இல் நேரடியாக நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
Sun NXT-இல் புதிய எக்ஸ்க்ளூசிவ் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் தீயவர் குலை நடுங்க படம் வெளியாகியுள்ளது. 7+ மொழிகளில் 4000+ தலைப்புகள், 44+ நேரடி சேனல்கள் ஆகியவற்றுடன், அனைத்து வயதினருக்கும் மற்றும் அனைத்துப் பிராந்தியங்களின் பார்வையாளர்களுக்கும் Sun NXT தொடர்ந்து முன்னணி OTT தளமாக திகழ்கிறது.


