Shadow

Brand New Day: மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஸ்பைடர்-மேன் படம்

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ பிரத்தியேக போஸ்டர்கள், சினிமாகான் 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டன. இப்போஸ்டர்களினால் அனைவரது விருப்பமான வலை வீசும் நாயகனைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.  இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி சில வாரங்களுக்குப் பிறகு, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சூப்பர் ஹீரோவின் அடுத்த அத்தியாயத்தின் புதிய காட்சிகளை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.

சோனி நிறுவனத்தின் தலைவர் டாம் ரோத்மன், படத்தின் இரண்டு போஸ்டர்களை முதலில் வெளியிட்டார். “அந்த சூப்பர் ஹீரோவைப் பற்றி கடந்த காலத்தில் பல கதைகள் இருந்தபோதிலும், இது, ‘நாங்கள் இதுவரை உருவாக்கிய எதையும் போல் இல்லை’ “ என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ஸ்பைடர்-மேன் தொடர்களிலேயே, இப்படம்தான் ஹாலண்டின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் பாராட்டினார். அதைத் தொடர்ந்து, ஹாலண்ட் அசைவொளி வாயிலாகத் தோன்றி, “நாங்கள் இதுவரை உருவாக்கிய ஸ்பைடர்மேன் படங்களிலேயே இதுதான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. மேலும் சில வழிகளில், மிகவும் முதிர்ச்சியானது” என்று அறிவித்தார்.

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே அனைத்துச் சாதனைகளை முறியடித்து, சமீப காலங்களில் அதிகம் பேசப்பட்ட மற்றும் பரவலாகப் பார்க்கப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த அமோகமான வரவேற்பு, பார்வையாளர்கள் ஸ்பைடர்-மேனின் உலகிற்குள் மீண்டும் மூழ்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். இந்த முறை பெரும் சவால்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான ஒரு புதிய கதைக்களத்துடன் ஸ்பைடர்-மேன் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தவுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sony Pictures IN (@sonypicturesin)

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கிய ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தில், டாம் ஹாலண்ட் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ஜெண்டாயா, ஜேக்கப் படலோன், சேடி சிங்க், ஜான் பெர்ன்தால், மார்க் ரஃப்பலோ, மைக்கேல் மாண்டோ மற்றும் ட்ராமெல் டில்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம், ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தை 2026 ஜூலை 31 அன்று, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அனைத்து ப்ரீமியம் வடிவங்களிலும் திரையரங்குகளில் வெளியிடும்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sony Pictures IN (@sonypicturesin)