32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பிரியங்கா ராஜகுமாரன் அறிமுகமாகும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’

Dinesh R சேலம் Published: 27/10/2026 2 நிமிட வாசிப்பு Updated: 28/10/2026 சினிமா
எழுத்து அளவு:


அருள் முருகன் பிக்சர் நிறுவனம் மற்றும் ட்ரீம் ரன்வே 26த் சென்ச்சுரி சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல். G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ ஆகும். இப்படத்தில் அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.

 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக அமல் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. காதல், பொழுதுபோக்கு என ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.இ.மணிகண்டன் என்கிற விமல்.G, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கி வருகிறார். திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் பெற்ற அனுபவத்தையும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனையும் பயன்படுத்தி, ரசிகர்களைக் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்குவதில் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – செம்பர் V. முருகேசன்
ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா
புரடக்சன் டிசைனர் – T. முத்துராஜ்
இசை – ஜோஷ்வா ஸ்ரீதர்
படத்தொகுப்பு – இளங்கோ
கலை – கண்ணன் S
சண்டை – P.C. ஸ்டண்ட்ஸ்
நடனம் – பாபா பாஸ்கர்
பாடலாசிரியர் – பா. விஜய்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.