Shadow

Tag: யோகிபாபு

கெணத்த காணோம் விமர்சனம்

கெணத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாவல் தாகத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய தண்ணிகரற்ற ஒரு படைப்பாகும். மேலும் தண்ணீர் தண்ணீர் என்ற பழைய திரைப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக தாகத்தை முன் வைத்த படைப்புகள் என்றாலே ஓர் உணர்ச்சிகரமான பிணைப்பு ஏற்படும். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா தண்ணீருக்கான தாகத்தை மையப்படுத்தியே இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். மூலக்கதை நடிகர் ஆறுபாலா கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறு கிராமம் ஒன்றில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. அவர் தன் காதலியைக் கரம்பிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் தவிக்க, ஒருபுறம் ஊரே தண்ணீர் வேண்டித் தவிக்கிறது. இச்சூழலில் யோகிபாபுவின் வீட்டின் முன் கிணறு தோன்றினால் தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நிலை வருகிறது. யோகிபாபுவும் ஊருக்காகச் சம்மத...
கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை

கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை

சினிமா, திரைச் செய்தி
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்" ஆகும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுசீந்திரன், "ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலைச் சொன்னவர் இயக்குநர். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையைக் கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பைப் பலமடங்கு கொடுக்க...
மகாசேனா விமர்சனம் | Mahasena review

மகாசேனா விமர்சனம் | Mahasena review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மகாசேனா என்பது யாளீஸ்வர் எனும் தெய்வத்தைக் குறிக்கும் திருநாமங்களில் ஒன்றெனப் படத்தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். யாளிமலையில் உள்ள குரங்கணி எனும் ஊரில், எவர் கண்ணுக்கும் தெரியாத ‘யாளீஸ்வரர் சிலை’ ஒன்று கோயிலில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சித்ரா பெளர்ணமியன்றே அச்சிலையைக் கண்களால் காண முடியும். அதை அபகரிக்க அடிவாரப்பகுதி மக்கள் மூவாயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்கின்றனர். குரங்கணியின் தலைவன் செங்குட்டுவன் அதைக் காப்பாற்ற நினைக்க, அதை அடைந்தே தீருவது எனும் தீவிரமான பிடிவாதத்துடன் உள்ளார் அடிவாரப்பகுதி தலைவி கங்கா. யாளி சிலையை அடைந்தே தீருவதென்ற கங்காவின் சபதம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நரபலி கொடுக்கும் காட்டுவாசிகளாக உள்ளனர் அடிவாரப்பகுதி மக்கள். அதிகாரிகளின் தலைகளைக் கொய்து சாக்கில் சுருட்டி எடுத்துச் செல்லும், கைலி அணிந்த நாகரீகமானவர்களாக உள்ளனர் குரங்கணி மக்கள். குரங்கணி...
அர்ஜுன் தாஸ் – அன்னா பென் – யோகிபாபு | புதுப்படப் பூஜை

அர்ஜுன் தாஸ் – அன்னா பென் – யோகிபாபு | புதுப்படப் பூஜை

சினிமா, திரைத் துளி
முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் (Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு, வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந...
“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ

“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். இயக்குநர் ராஜா மோகன், "ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது. அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது, அவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டிக் கொண்டிருந்த அவனை அண்ணாந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணாந்து பார்க்கிறேன். புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். அது போல, 'இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?' என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து இப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குநரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குநராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது....
அக்யூஸ்ட் விமர்சனம் | Accused review

அக்யூஸ்ட் விமர்சனம் | Accused review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கணக்கு என்றழைக்கப்படும் கனகு சுப்புரத்தினத்தைப் புழல் சிறைச்சாலையில் இருந்து சேலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் காவலர்கள். கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கணக்கை வழியிலேயே கொல்வதற்கு ஒரு கூலிப்படையும், என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் முயற்சி செய்கிறது. யாரிந்தக் கணக்கு, அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா என்பதே படத்தின் கதை. குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, உடன் செல்லும் காவலர்களில் ஒருவராகச் செல்லும் வேந்தன் பாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார். உயரதிகாரிகளின் அழுத்தத்தையும் மீறி எப்படியாவது கனகை உயிருடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நினைக்கிறார். பயணத்தில், ஏதோ ஒரு புள்ளியில், மலர் என பச்சை குத்திக் கொண்டிருக்கும் கனகு மீது ஒரு சாஃப்ட் கார்னர் வேந்தனுக்கு உருவாகி விடுகிறது. கனகுவின் காதல் மீதும் சிறு அபிமானம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல்,...
தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review

தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆகாச வீரன் எனும் பரோட்டா மாஸ்டர், தன் மனைவி பேரரசிக்கும், அம்மாவான பொட்டுக்கும் இடையில் சிக்கிப் படாதபாடுபடுகிறான். அவனது பாடு, அல்லது எந்தவொரு கணவனின் பாடும், ஒரு முடிவே இல்லாத பயணம் என்பதைப் படம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. படம் முழுவதும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றது. அவ்வளவு கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேருக்கும் படத்தில் ஒரு தனித்த அடையாளமும், திரைக்கதையில் ஒரு சின்ன பங்கும் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ்க்கு, மனிதர்களைக் கூட்டி, அவர்கள் மூலமாக உறவுகளைப் பற்றிப் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது. இப்படத்தின் குறை, ஆகாச வீரனாக வரும் விஜய் சேதுபதி நிறையப் பேசுகிறார், அதையும் சத்தமாகப் பேசிக் கொண்டே உள்ளார். பேரரசியாக நித்யா மேனன் கலக்கியுள்ளார். அவர்களது மகள் குட்டிச் சிறுமியாக நடித்திருக்கும் மகிழினி ஷோ-ஸ்டீலராக அசத்தியுள்ளார். பாதி மொட்டைய...
அக்யூஸ்ட் – சினிமாவில் உதயாவின் 25 ஆவது ஆண்டு

அக்யூஸ்ட் – சினிமாவில் உதயாவின் 25 ஆவது ஆண்டு

சினிமா, திரைச் செய்தி
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தைக் கன்னடத் திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டன்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழ...
ஏஸ் விமர்சனம் | Ace review

ஏஸ் விமர்சனம் | Ace review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது. குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், சொந்த வீட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும் பணம் தேவைப்படுகிறது. அதற்காக போக்கர் விளையாடி பணம் ஈட்ட நினைக்கிறார் போல்ட் கண்ணன். ஆனால், அப்போட்டியை நடத்தும் தர்மா, விளையாட்டில் அவர்களை ஏமாற்றி கடவுச்சீட்டைப் பிடுங்கிக் கொள்வதோடு, கொடுத்த கடனை வட்டியோடு அடைக்கும்படி மிரட்டுகிறார். இந்த அனைத்து...
கஜானா விமர்சனம் | Ghajaana review

கஜானா விமர்சனம் | Ghajaana review

சினிமா, திரை விமர்சனம்
நாகமலையில் புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தை யாளி எனும் மிருகம் காவல் காக்கிறது. அப்பொக்கிஷத்தை அடைய நினைக்கும் மனிதர்கள் அனைவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். காசியப முனிவர்க்கு ஆரி, சூரி என இரண்டு மனைவிகள் என ஒரு கிளைக்கதை பிரிகிறது. ஹிந்துப் புராணத்தின்படி, காசியப முனிவர், தக்ஷனின் எட்டு மகள்களை மணம் புரிந்தவர். அதில், கத்ரு எனும் மனைவியின் மூலமாக 1000 நாகர்களும், கத்ருவின் இளைய சகோதரி வினதா மூலமாக அருணன், கருடன் என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்தப் புராணக் கதையை மையமாக எடுத்து, நாகர்களும் கருடர்களும் ஆரி சூரிக்குப் பிறந்ததாகப் படத்தில் காண்பிக்கின்றனர். கருடர்கள் அசுரர்கள் ஆகின்றனர், நாகர்களில் ஒருவரான வாசுகி சிவனின் கழுத்தில் அணியாக மாறுகின்றனர். பஞ்சபூதங்களை அடக்கவல்ல நாகரத்தினக் கற்களை நாகர்களுக்கு வரமாக அளிக்கின்றார் சிவன். கருடர்கள் அதைத் திருட நினைப்பதால், பூமியில் நாகமலையில் ந...
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்றுள்ளார். சூழ்நிலைகளைக் கிரகித்து உடன்நிகழ்வாக (Spontaneity) அவர் சொல்லும் பொய்களும், அழகான முக பாவங்களும் ரசிக்க வைக்கின்றன. யோகிபாபு உடன் வரும் காட்சிகளில் கூட கமலேஷ் ஜெகன் தான் ஸ்கோர் செய்கிறார். தர்மதாஸின் மூ...
Dev cinemas | நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும் காதலும்

Dev cinemas | நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும் காதலும்

சினிமா, திரைத் துளி
தேவ் சினிமாஸ் தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஓர் அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. நகைச்சுவை நாயகன் யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான ப...
லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

சினிமா, திரை விமர்சனம்
இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் சாப்பிடுகின்றனர். பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். உயிர் போகும் அப்பிரச்சனையிலிருந்து எப்படி அந்த நால்வரும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. மிமிக்ரி கோபியாக ரமேஷ் திலக், திடீர் திருப்பதியாகக் கருணாகரன், குயில் குமாராக C. மணிகண்டன், பேய் முருகேசனாக ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோ சினிமாஸ் C. மணிகண்டன் தயாரித்த...
“உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும்” – யோகிபாபு

“உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும்” – யோகிபாபு

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் நகைச்சுவைக் கலாட்டா தான் இந்தப் படம். இயக்குநர் பிரதாப், “இந்தக் கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரைச் சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்தக் கதாப்பாத்திரத்துக்கு இவரைப் போடலாம், அல்லது இவரைப் போடலாம் என அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணை...
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாமனிதன் படத்தின் நீட்சியாகவே உள்ளது. ஒரு ஆண், தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்குச் செல்வான் என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பதிந்துள்ளார் சீனு ராமசாமி. செல்லதுரையும், அவன் தங்கையும் நிராதரவாக ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ஆதரவில் வளர்கின்றனர். தன் தங்கைக்காகவே வாழுகிறான் செல்லதுரை. வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமாக, செல்லதுரையின் தங்கை ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்; சிறு வயதில் தன்னை விட்டுச் சென்ற தாயைப் பார்க்கின்றான்; வேறொரு மணம் புரிந்து கொள்ளும் தந்தையும் அவனைத் தேடி வருகிறார். இவற்றை செல்லதுரை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. கதையின் மாந்தர்களைத் துரிதமாக அறிமுகப்படுத்திவிட்டு, முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாலும் வசனங்களாலும் ஒப்பேற்றியுள்ளார். இடைவேளைக்குப் பிறகே படம் தொடங்குகிறது. முதற்பாதியை ஒப்பேற்ற நாயகி...