Shadow

அகத்தியா – டீசர் | ஜீவா | அர்ஜுன் | ராஷி கண்ணா

‘அகத்தியா’ படத்தின் டீசர் இன்று வெளியானது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகளும், முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையும், ஓர் அற்புதமான ஃபேண்டஸி திகில் த்ரில்லர் படத்திற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது.

‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் “அகத்தியா” படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.

நடிகர் ஜீவா, “ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள் என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் அது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இப்படைப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டுமென விரும்பி உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மிகப் புதிதான உலகிற்குள் உங்களை அழைத்துச் செல்லும்” என்றார்.

ராஷி கண்ணா, “நான் ஸ்கிரிப்டைக் கேட்ட கணம், கதையின் பிரம்மாண்ட உலகைக் கேட்டுச் சிலிர்த்துப் போனேன். அகத்தியா நான் முன்பு செய்த எந்தப் படத்தையும் போல் இல்லாமல், அசத்தலான காட்சிகள் மற்றும் நம்பமுடியாத இசை, பிரம்மாண்ட புதிய உலகம் எனப் பார்வையாளர்களைக் கண்டிப்பாகக் கவரும் என்று நம்புகிறேன்” என்றார்.

இப்படத்தை, டாக்டர் ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து ‘அகத்தியா’ படத்தைத் தயாரித்துள்ளது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.