
“சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி” – பா.விஜய் | அகத்தியா
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் 'அகத்தியா' திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி முதல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் 28ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகை ராஷி கண்ணா, ''நான் ஏற்கனவே 'அரண்மனை 3' , 'அரண்மனை 4' போன்ற ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பா். விஜயைப் பாடலாசிரியராகத் தெரிந்திருக்கும்...










