Shadow

அஷ்டகாளி திருவிழா | சூழல் – தி வோர்டெக்ஸ் 2

சுழல் – தி வோர்டெக்ஸ் முதல் சீசனில் மயானக் கொள்ளை திருவிழாவின் பின்னணியில் அமைந்திருந்தது. இரண்டாவது சீசன் மேலும் ஒரு படி முன்னேறி, அஷ்டகாளி திருவிழாவைக் களமாகக் கொண்டு கதையைச் சொல்லுகிறது. இந்தத் திருவிழா தெய்வீகமான பெண்மையின் ஆற்றலைப் போற்றும் ஒரு திருவிழா. இதில் பக்தர்கள் எட்டு தேவியர்களை வழிபடும் தெய்வீக நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. திருவிழாவுக்குப் பின்னணியில் உள்ள எட்டு தேவிகளின் விசித்திரமான அம்சங்களைச் சின்னமாகக் காட்டும் எட்டு சிறுமிகள் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த சிறுமிகள் ஒவ்வொரு தேவியின் ஆற்றலையும் குணாதிசயங்களையும் ஆழமாகவும் சிறப்பாகவும் பிரதிபலிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தேவியின் தெய்வீக சக்திகளைக் கதையில் உயிர்ப்பிக்கின்றனர்.

தமிழின் முக்கிய படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி எழுத்தில் இந்தப் படைப்பு உருவாகியுள்ளது. தமிழ்த் திருவிழாக்களின் பல பரிமாணங்களையும் ஆராய்ந்து, புதிய முறையில் பெண்கள் திறனை வெளிப்படுத்தும் கதைக்களத்தை இக்கதையில் உருவாக்கியுள்ளனர். பாரம்பரிய மகத்தான கலைகளையும், பெண்களின் துணிச்சலும் தன்னலமும் ஒரே நேரத்தில் இணைத்து, ஒரு த்ரில்லர் கதையாக உருவாக்கியுள்ளனர். இந்த எட்டு சிறுமிகளின் அட்டகாசமான நடிப்பும், கலாசார ரீதியான அம்சங்களும், ஆழமான கதையும் “சுழல்” தொடருக்கு மெருகூட்டுகின்றது. முதல் சீசனைப் போலவே, இரண்டாவது சீசனும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.