32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

232 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 11)
மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி? தொடர்

மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி?

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 1 இதோ மரணத்தின் மர்மங்கள் இவை தான் என்று திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற எவராலும் முடியாது. இறந்தவர் எவரும் கல்லறையிலிருந்து வெளிக்கிளம்பி வந்து மரணத்தின் மர்மங்களைத் துலக்கியதாக வரலாறு இல்லை. மரணத்தைப் பற்றி எழுதும்பொழுது வேதங்கள் கூறுவதையும், வேதாந்த பாஷ்யங்கள் எடுத்துரைப்பதையும், உலகத்தின் பல்வேறு சமயத் திருமுறைகள் விளம்புவதையம் மரபுவழியாக வந்த சான்றுகளையும் நம்பிக்கைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகின்றது. ரிஷிகளும் ஞானிகளும் யோகிகளும் சுவானுபூதியில் தாம் உணர்ந்த பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். […]

27/02/2013 admin
அமீரின் ஆதி பகவன் விமர்சனம் சினிமா

அமீரின் ஆதி பகவன் விமர்சனம்

மெளனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என அசத்திய இயக்குநர் அமீரின் அடுத்த படம். நீண்ட இடைவெளிக்குப் பின் அவரின் நான்காவது படம் வெளியாகியுள்ளது. இடையில் யோகி என்னும் படத்தை எழுதி தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தாதாக்கள் மோதிக் கொள்வது தான் படத்தின் ஒரு வரி கதை. ஆதி ஷண்முகம், பகவான் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. வழக்கமான அமீர் பட நாயகன் போல் ஜெயம் ரவி முதல் பாகத்தில் […]

25/02/2013 admin
ஆப்ரேஷன் கமல் மங்கூஸ் அரசியல்

ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

அனுப்புநர்: பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600 பென்சில்வேனியா ஏவ், வாஷிங்டன் டி.சி. – 20500, யுனைடேட் ஸ்டேட்ஸ். +1 202-456-1111. பெறுநர்: கமல் ஹாசன், இராஜ்கமல் இன்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ், 218 டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018. +91 44 24336348. மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: தாங்கள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடை குறித்து. எஃப்.பி.ஐ. யின் அறிக்கையின்படி தாங்கள் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர் என்பது தெளிவாக நிரூபனமாகி உள்ளது. ஆகையால் […]

10/02/2013 admin
விஸ்வரூபம் விமர்சனம் சினிமா

விஸ்வரூபம் விமர்சனம்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் ஒருவர் நியூயார்க் நகரை தாலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது தான் படத்தின் கதை. படத்தின் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் கமல் என்னும் உன்னத கலைஞர் தனது நடிப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளார். அவரது நடனம், பார்வை, நடை, வசனம் பேசும் தொனி என சகலத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். அதன் பின் படத்தில் கோலேச்சுவது இயக்குநர் கமல். தமிழ் சினிமா கண்டிராத ஒரு தொழில்நுட்ப விருந்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். படத்தின் மாபெரும் பலம் வசனங்கள். வசனங்களுக்கு […]

08/02/2013 admin
கடல் விமர்சனம் சினிமா

கடல் விமர்சனம்

மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என மூவர் கூட்டணி; மேலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான இணைகளின் வாரிசுகள் அறிமுகமாகும் படம்;  அதே போல் சுமார் பன்னிரெண்டு வருடத்திற்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கிறார். ஆர்ப்பரித்திருக்க வேண்டிய கடல், அலைகள் ஓய்ந்த இராமேஸ்வரம் கடற்கரை போல் அமைதியாக உள்ளது.  அதை தான் “ஆழ்ந்த தத்துவமும், ஆன்மீகமும் கொண்ட ஸ்க்ரிப்ட்” என இப்படத்திற்கு கதை – வசனம் எழுதிய ஜெயமோகன் படத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார் போலும்.  தேவனை கோபித்துக் […]

06/02/2013 admin
யார்.. யோகி..!! ஆன்‌மிகம்

யார்.. யோகி..!!

சமீப நாட்களில் யோகிகள் என்ற பெயரில் வந்து இம்சிப்பவர்களின் எண்ணிக்கை கொசுத் தொல்லையை விடவும் மோசமானதாகிவிட்டது. மேலே பார்த்தேன் யோகியாய்ட்டேன். மொட்டை மாடில நின்னு கீழே பார்த்தேன், உணர்ந்தேன் உடனே யோகி ஆய்ட்டேன்ன்னு ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக் கொண்டு யோகியாகி விடுகிறார்கள். யோகத்தின் அடிப்படை கூட தெரியாத இந்த அசடர்களையும் நம்பிக் கொண்டு அவர்களுக்கு வால்பிடிக்க ஒரு கூட்டம் இருப்பதினால்தான் இவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாய் குடுமியும், குங்குமமும் வைத்துக் கொண்டு இரண்டு நாளில் ஞானம் தருவதாய் […]

24/01/2013 admin
கண்ணா லட்டு தின்ன ஆசையா! விமர்சனம் சினிமா

கண்ணா லட்டு தின்ன ஆசையா! விமர்சனம்

இந்த ஆண்டு தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ‘பவர் பொங்கல்’ என்றே சொல்ல வேண்டும். பவர் ஸ்டார் டாக்டர். ஸ்ரீநிவாசனின் பிடிவாதமான மூலதனம் எதுவும் வீண் போகவில்லை. ரஜினிக்கு போட்டியாக வளர வேண்டும் என்ற அவரது கனவிற்கு ‘இதுதமிழ் குழுமம்’ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிவாவின் எதிர் வீட்டிற்கு குடி வரும் செளம்யாவை, சிவாவும் அவரது இரண்டு நண்பர்களும் காதலிக்கின்றனர். செளம்யா மூவரில் யாரது காதலை ஏற்றுக் கொள்கிறார் என்பதுடன் படம் முடிகிறது. “பவர்” குமாராக பவர் […]

14/01/2013 admin
அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் சினிமா

அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

  கவர் பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனை போல அகப்பட்டீர், கிடந்து உழல அகப்பட்டீரே !  – பட்டினத்தார்.   பணம் கொடுத்து இப்படத்தினை திரையரங்கில் பார்ப்பவரின் மனநிலையை தான் என்ன அழகாக பட்டினத்தார் சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். போருக்குச் செல்பவர், நோயில் வீழ்ந்தவர், சகிக்க முடியாத துன்பத்தில் சிக்கியவர், தனிமையில் வாடும் முதியவர்கள் தான் தத்துவ விசாரத்தில் இறங்குவர். அப்படி ஒரு மனநிலைக்கு இப்படம் இட்டுச் செல்கிறது. விதி […]

12/01/2013 admin
நீ தானே என் பொன்வசந்தம் விமர்சனம் சினிமா

நீ தானே என் பொன்வசந்தம் விமர்சனம்

அலைபாயுதே படத்தில் வரும் ‘எவனோ ஒருவன் யாசிக்கிறான்..’ பாடல் தான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கே  இன்ஸ்பிரேஷனாம். நீ தானே என் பொன்வசந்தம் படமும் அதன் தொடர்ச்சி தானென கெளதம் வாசுதேவ் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். எங்கிருந்து கருவை எடுத்தார் என்று தெரிவதால், படத்தின் கதையையும் சுலபமாக யூகித்து விட முடியும். அதாவது நாயகன் நாயகி் காதலிக்கிறார்கள். புரிதலின்மையால் சண்டை வந்து பிரிகின்றனர். சேர்ந்தார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. நாயகன் வருண் கிருஷ்ணனாக ஜீவா. பள்ளி, […]

15/12/2012 admin
கும்கி விமர்சனம் சினிமா

கும்கி விமர்சனம்

மைனாவின் எச்சமாக.. மலைக்காட்டுக்குள் மீண்டுமொரு காதல் கதை. நாயகியை கண்ட முதல் பார்வையிலேயே காதலில் விழும் மாறுபடாத பாத்திரத்தில் விக்ரம் பிரபு. நடிகர் பிரபுவின் மகன். மாணிக்கம் என்னும் யானையை வளர்த்து வரும் பாகன் கொம்பனாக நடித்துள்ளார். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், அனைத்தையும் இழந்த பின் தனது காதலை சுயநலமென உணருகிறான். படத்தின் நாயகன் யானை என்பதால், விக்ரம் பிரபுவிற்கு ஹீரோயிசத்திற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. ஆனால் மாறுபட்ட படத்தில் […]

15/12/2012 admin
நீர்ப்பறவை விமர்சனம் சினிமா

நீர்ப்பறவை விமர்சனம்

காதலித்து மணம் புரிந்துக் கொண்ட ஒரு தம்பதியின் வாழ்க்கை, சம கால அரசியலால் எப்படிச் சிதைகிறது என்பதே படத்தின் கதை. சாகச நாயகனாக விஷ்ணு. அவர் உலகத்தைப் படிச்சவர் என்ற நந்திதாதாசின் வசனத்தில் அறிமுகமாகிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகனுக்குள் மலரும் காதலைப் போல் நாயகியின் தொடுதலில் இருந்தே தொடங்குகிறது. என்ன ‘தன்தனதன்தன..’ என பின்னணி இசை மட்டுமில்லை. காதல் வந்ததும் மெல்ல நாயகன் சாகசக்காரான் ஆகிறான். ஊரில் குடியை ஒழிக்கிறான்; தனி கப்பல் வாங்குவதாக சவால் விடுகிறான்; […]

06/12/2012 admin
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம் சினிமா

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல், பாடல், வில்லன், சண்டை, ரத்தம், குத்து வசனங்கள், நகைச்சுவைக்கு தனி நடிகர், அம்மா/தங்கச்சி சென்ட்டிமென்ட், லூசுத்தனமான கதாநாயகி, பழி வாங்குதல், தியாகம் செய்தல், தர்மத்தை காத்தல், அநியாயத்தை அழித்தல், மெஸ்சேஜ் மற்றும் மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்தல் என்று எதுவுமில்லாத ஒரு படம். அதுவும் தமிழ்ப்படம்.   அடுத்த நாள் தனக்கு திருமணம் என்பதை மறந்து விடுகிறான் ப்ரேம். ஏன் மறந்தான்.. திருமணம் நடந்ததா.. […]

01/12/2012 admin
ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம் தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம்

மு.கு.:  ‘ஃபேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?‘ என்ற வினவு தள பதிவிற்கு ஓர் எதிர்வினை. கூட்டமாக வாழ்ந்த மனிதன், தன்னை சுற்றி உள்ளவற்றில் இருந்து தன் சிந்தனையை வளமாக்கிக் கொண்டு எண்ணிலா சாதனைகள் பல படைத்திருக்கான். எனினும் மதம், இனம், நிறம், சாதி இத்யாதிகளுக்கு எல்லாம் தோற்றுவாயான பொருளாதாரம் என்னும் அதீத சக்தியின் பிடியில் சிக்குண்டு பிரிவிணைவாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், “மேக்கிங் தி வேர்ல்ட் மோர் ஓப்பன் அண்ட்  கணக்டட்” எனும் வாசகத்தோடு வரும் ஃபேஸ்புக் 100 கோடி […]

26/11/2012 admin
லைஃப் ஆஃப் பை விமர்சனம் சினிமா

லைஃப் ஆஃப் பை விமர்சனம்

ஒரு புலியை உங்களால் நேசிக்க இயலுமா? அதுவும் அதனிடம் தனியாக சிக்கிக் கொள்ளும் பொழுது? ‘பை’ என்ற பெயருடைய 16 வயது சிறுவன் அப்படித் தான் சிறு கப்பலில் புலி ஒன்றுடன்  பசிஃபிக் பெருங்கடலின் மத்தியில் தனியனாய் சிக்கிக் கொள்கிறான். சுரஜ் ஷர்மா. 16 வயது ‘பை’யாக நடித்துள்ளார். கதை சொல்லி இர்ஃபான் கானாக இருந்தாலும் சுரஜ் தான் படத்தின் நாயகன். இந்தக் கதாபாத்திரத்திற்காக சுமார் 3000 பேர்களில் இருந்து சுரஜை வடிகட்டி எடுத்துள்ளார் இயக்குனர் ஆங் […]

25/11/2012 admin