32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

232 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 10)
பரதேசி விமர்சனம் சினிமா

பரதேசி விமர்சனம்

இன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு. மீண்டும் அதை, முன்பை விட அழுத்தமாக உணர்த்துகிறது ‘பரதேசி’. லட்சணமாய்ப் பார்த்துப் பழகிய நாயகன் முகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு அழுக்குப்படுத்தி விடுவார் பாலா. அத்தகைய நாயகனின் பிம்பம் கொண்டு பார்வையாளர்கள் மீது முதல் தாக்கத்தினை ஏற்படுத்துவார். அந்த அழுக்கு முகம் கொண்ட நாயகர்கள், மற்ற தமிழ்ப்பட நாயகர்களைப் போல சராசரியானவர்களே. உதாரணம் ஷங்கரின் நாயகர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், பேரரசின் நாயகர்களுக்கு ரவுடியிசமும் பெருங்குற்றம். பாலாவின் நாயகர்களுக்குத் தங்களை […]

18/03/2013 admin
வத்திக்குச்சி விமர்சனம் சினிமா

வத்திக்குச்சி விமர்சனம்

“வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில..” ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வந்த முதல் படமான தீனாவில் வரும் பாடல் வரிதான் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக வந்திருக்கும் வத்திக்குச்சி படத்தின் ஒரு வரி கதை. ஏ.டி.எம். வாசலில் சக்தி என்னும் இளைஞனின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல். இந்த உரசலில் பத்திக் கொள்ளும் நாயகனின் எதிர்வினை தான் படம். சும்மா கொழுந்து விட்டு எரிகிறது. ஆனால் அதனால் எவரும் எரியப்படவில்லை என்பது தான் […]

15/03/2013 admin
இறந்தவரும்.. அவர் நினைவும்.. ! தொடர்

இறந்தவரும்.. அவர் நினைவும்.. !

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 10 இயற்கை அன்புப் பிணைப்புக்கு முதலிடம் கொடுக்கின்றது. நாம் வெகுவாக நேசித்த ஒருவர் இறந்து விட்டால் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போது நமது சூட்சும சரீரம் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை உணரலாம். நாம் அவருடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுகள் ஸ்தூல சரீரத்தில் ஓரளவு பிரதிபலிக்கின்ற போதிலும் கண் விழித்தவுடன் எல்லாமே மறந்து விடுகின்றன. பக்கத்தில் படுத்திருப்பவர்கள் இதை அவதானிக்கக் கூடியதாயிருக்கும். இறந்தவரைப் […]

15/03/2013 admin
பிரக்ஞை தொடர்

பிரக்ஞை

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 9 மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை இழந்து விடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற “நான் இருக்கிறேன்” என்ற நினைவு (பிரக்ஞை) தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படியாகத் தொடர்கின்ற பிரக்ஞையை ஆத்மா (Soul) என்றும் ஆவி (Spirit) என்றும் தன்முனைப்பு (Ego) என்றும் உளம் (Psyche) என்றும் உயிர் என்றும் மனசு என்றும் தத்துவஞானிகள் அவரவரின் சமயத்திருமறைகளின் கண்ணோக்கில் விவரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் “நான் இருக்கிறேன்” என்ற பிரக்ஞை இருக்கிறது. […]

13/03/2013 admin
சுண்டாட்டம் விமர்சனம் சினிமா

சுண்டாட்டம் விமர்சனம்

கேரம்-போர்ட் விளையாட்டை மையமாக கொண்டு வந்திருக்கும் படம் என்பதை தான் ‘சுண்டாட்டம்’ என்ற தலைப்பு உணர்த்துகிறது. படத்தின் களம் வடச் சென்னை என்பதிலிருந்தே கதையை யூகிக்கலாம். ‘படத்தில்இரண்டு நாயகன்கள். ஒன்று இர்ஃபான். இன்னொன்று மது’ என சொல்லியுள்ளார் இயக்குநர் பிரம்மா G. தேவ். காசி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ள மதுவைநாயகன் என சொல்ல முடியாது. ஆனால் படத்தின் முதுகெலும்பு அல்லது மிக முக்கியமான கதாபாத்திரம் இவர் தான். அவரது போதையில் சொருகிய கண்கள், வசனம்உச்சரிக்கும் தொனி, தோல்வியை […]

12/03/2013 admin
ஒன்பதுல குரு விமர்சனம் சினிமா

ஒன்பதுல குரு விமர்சனம்

ஒருவருக்கு ஒன்பதுல குரு இருந்தால் அவர் மேற்கொள்ளும் செயல்கள் எல்லாம் வெற்றியடையும் என்கிறது ஜோதிடம். நண்பர்கள் நால்வர் ‘பேச்சுலர் பார்ட்டி’க் கொண்டாட பெங்களூரு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எப்படி மீண்டனர் என்பது தான் படத்தின் கதை(). தமிழ்ப்படம் போல முயன்றுள்ளனர். நாயகன் பில்லா டேவிட்டாக வினய். படத்தில் வரும் அவரது நண்பர்களின் பெயரும் அப்படியே. ரங்காவாக சத்யன், கோச்டையானாக அரவிந்த் ஆகாஷ், குருவாக சாம்ஸ்.இவர்கள் நால்வரும் தான் டைட்டில் கேப்ஷனில் வரும் 4 […]

09/03/2013 admin
மரணத்தின் பின்னர் தொடர்

மரணத்தின் பின்னர்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 8 சட உலகுக்கே உரித்தான ஆவிப்பொருளை (Etheric Matter) உதறினாலொழிய சூட்சும உலகை அடையமுடியாது. எனவே இவர்கள் சில நாட்களுக்கு ஆவிவடிவத்தை உதற முடியாமலும் தாம் நேசித்துப் பக்குவப்படுத்தி வந்த உடல் அழிந்துவிட்டபடியால் புலணுணர்வுகளைத் திருப்பிப் பெற இயலாமலும் இங்குமின்றி அங்குமின்றி இழுபறிப்பட்ட இடைநடுவே நின்று சஞ்சலப்படுகிறார்கள். பலவிதமான ஆசைகளையும் கற்பனைகளையும் மனதில் வளர்த்து வைத்துக்கொண்டு தங்கள் உடல்களை ஆசையுடன் அலங்கரித்துப் பேணி வந்த யுவதிகளும் இளைஞர்களும் சடுதி மரணம் […]

08/03/2013 admin
மரணிக்கும்போதும் பின்னரும் தொடர்

மரணிக்கும்போதும் பின்னரும்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 7 மரணம் நிகழும்பொழுது உடலில் வேதனை எதுவுமே தெரிவதில்லை. ஆழ்ந்த துயில் மெதுமெதுவாக நம்மை அரவணைப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டவர்கள் கூட இறக்கும்பொழுது வேதனையற்ற நிலையிலேயே உயிர் விடுகிறார்கள். இதை இறந்தவுடன் சடலத்தின் முகத்தில் ஏற்படும் அமைதியான, சுகமான பாவத்தை நாம் அவதானிப்பதன் மூலம் உணரலாம். பிராணன் உடலைவிட்டு வெளியேறியவுடன் ஸ்தூல சரீரத்துக்கும் ஆவி  வடிவத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்திக் […]

07/03/2013 admin
ஹரிதாஸ் விமர்சனம் சினிமா

ஹரிதாஸ் விமர்சனம்

ஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே!! ஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை.  ஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை ‘அப்பா’. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் […]

06/03/2013 admin
மரணம் என்றால் என்ன? தொடர்

மரணம் என்றால் என்ன?

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 6 மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள். மரணம் சம்பவிப்பதற்கு […]

05/03/2013 admin
சூட்சும உலகம் தொடர்

சூட்சும உலகம்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 5 இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம். சூட்சுமமாக இருக்கும் […]

04/03/2013 admin
முன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும் தொடர்

முன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 4 இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும். முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். “பவான் ஜேர்னல்” என்ற சஞ்சிகையில் (13-7-69) அவர் எழுதிய கட்டுரையில், தான் 1903-ம் ஆண்டு இறந்த தனது தந்தையுடனும், 1821-ல் இறந்த நெப்போலியனுடனும், இன்னும் சேர் ஒலிவர் லொட்ஸ், மீராபாய், மோதிலால் நேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார்.  1930-ம் ஆண்டு தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு முன்னர், திரு.முன்ஷி காஷ்மீருக்குத் […]

03/03/2013 admin
எஸ்.பி.ஆர். சங்கம் தொடர்

எஸ்.பி.ஆர். சங்கம்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 3 எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார். இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் “மீடியம்கள்” மூலம் தொடர்பு கொண்டு குடும்ப […]

02/03/2013 admin
சூட்சும தளம் தொடர்

சூட்சும தளம்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 2 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளம் கிடைக்கப் பெறுவதுடன் அதனைப் பற்றிய சிறப்பான முடிவையும் பெற முடியும்.  தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி […]

28/02/2013 admin
மரண பயம் தொடர்

மரண பயம்

பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் இறந்தேயாக வேண்டும். இறப்பு நிச்சயமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், மரணத்தைப் பற்றிச் சிந்தித்து மனதை நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இளம் வயதினர் தாம் இப்போதைக்கு இறந்து விடப் போவதில்லை என்ற உள்ளுணர்வு தரும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வயோதிகர்களோ  மரணம் பற்றிய சிந்தனைகள் துன்பகரமானவை என்று நினைத்து அவ்வெண்ணங்களை மனதில் வளர விடுவதேயில்லை. ஆனால், இறப்பு நாம் எதிர்பார்த்திருக்கும்போது இயல்பாகவும் வந்துவிடுகிறது. சற்றும் எதிர்பாராது இருக்கும்போது திடீரென்றும் வந்துவிடுகிறது.  வாழவேண்டும் […]

27/02/2013 admin