32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4071 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 14)
போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review சினிமா

போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

ஒருவனின் பழிவாங்கும் உணர்வு, சம்பந்தமே இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. யாரோ ஒருவன், முன்னால் ரெளடி தனாவின் மகனைக் கொன்றுவிட, காவல்துறையினர்தான் அவனைக் கொன்று விடுவதாகத் தனா தவறாக நினைத்துக் கொள்கிறான். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் வெஞ்சினத்துடன் தேடித் தேடிக் கொல்வதுதான் போலீஸ் ஃபேமிலியின் கதை. தனாவாகப் பருத்தி வீரன் சரவணன் நடித்துள்ளார். மகனின் மரணத்திற்குக் காரணமான அனைவரது குடும்பத்தையும் கொன்றே தீருவது என்று ஆவேசமாக உள்ளார். அப்படி சிலரைக் கொன்றதும், வலியே […]

13/03/2026 Dinesh R
மண்டவெட்டி – ஒரு பெண்ணின் உளவியலை உணர்வுப்பூர்வமாய்ப் பேசும் படம் சினிமா

மண்டவெட்டி – ஒரு பெண்ணின் உளவியலை உணர்வுப்பூர்வமாய்ப் பேசும் படம்

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், ‘வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கித் தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாகப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் […]

10/03/2026 Dinesh R
“தடயம்: இன்னும் பல தூரம் அழைத்துச் செல்லும்” – சமுத்திரக்கனி OTT

“தடயம்: இன்னும் பல தூரம் அழைத்துச் செல்லும்” – சமுத்திரக்கனி

ஜீ5 -இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தடயம் இணைய தொடர் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன், பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்தத் தொடர், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இவ்வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வினில், ஜீ5 சார்பில் பேசிய கௌஷிக் நரசிம்மன், “பொதுவாக ஒரு […]

09/03/2026 Dinesh R
Patriot – நயன்தாரா ஸ்பெஷல் போஸ்டர் Movie Posters

Patriot – நயன்தாரா ஸ்பெஷல் போஸ்டர்

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்புப் போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் ஞாயிறு காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, […]

09/03/2026 Dinesh R
மரகத மலை – தமிழ்த் திரையில் முதல் முறையாக டிராகன் | சிறார் படம் சினிமா

மரகத மலை – தமிழ்த் திரையில் முதல் முறையாக டிராகன் | சிறார் படம்

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகசக் காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ள படம் ‘மரகதமலை’ ஆகும். அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

08/03/2026 Dinesh R
“செண்பாவின் கொரியப் பயணம்” – பிரியங்கா மோகன் | Made in Korea சினிமா

“செண்பாவின் கொரியப் பயணம்” – பிரியங்கா மோகன் | Made in Korea

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதைப் பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையைக் கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் […]

07/03/2026 Dinesh R
முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review சினிமா

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

முப்பது வருடங்களுக்கு முன் வெளியான ‘காதல் தேசம் (1999)’ படத்தில், நட்பின் மேன்மையையும் இணக்கத்தையும் எடுத்தியம்பும் பாடலின் தொடக்கச் சொற்கள் ‘முஸ்தபா முஸ்தபா’ ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த அப்பாடல் நட்பிற்கான பாடலாக மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஆழமான நட்பினைச் சொல்லும் விதமாக இத்தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி சேனலில் வேலை செய்யும் கார்த்திக், எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில் ஒருநாள் மட்டுமே நடித்த ஒரு மார்க்கமான காட்சி, ஆபாச (porn) இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. […]

07/03/2026 Dinesh R
காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review இது புதிது

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

ஒரு நாள் நிகழ்வு மட்டுமே ஞாபகமிருக்கும் அதிதியைத் தினம் தினம் புதிதாகக் காதலிக்கிறார் சித்தார்த். 50 First Dates (2004) படத்தின் ஒரு வரிக் கதையால் இன்ஸ்பையராகி, இசை, துரோகம், ஏமாற்றம், ஆழ்ந்த காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு முக்கோண காதல்கதையைத் தந்துள்ளார் இயக்குநர் விஜய். ‘சிரிச்சா போச்சு’ எனும் விரதத்தைப் பூண்டவராகச் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மதும்கேஷ். அதிதி காதலைச் சொல்லும் இடத்திலும் கூட மருந்துக்கு முகத்தில் ஒரு மாற்றத்தைக் காட்டிவிடக் கூடாத என கங்கணம் […]

07/03/2026 Dinesh R
99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review சினிமா

99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

அறுபத்தாறாம் எண் வீட்டில் வசிக்கும் சங்கீதாவும், தொண்ணூற்று ஒன்பதாம் எண் வீட்டில் வசிக்கும் ரஞ்சிதாவும் தோழிகள். சங்கீதாவிற்கு அமானுஷ்யமான கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு நல்ல பெண் ஆத்மா இருப்பதே அதற்கெல்லாம் காரணம் என்று துர்கா தேவி அன்னையார் சொல்கிறார். அந்த ஆத்மா யார், ஏன் அங்கு இருக்கிறது என்பதே படத்தின் கதை. 9966 எனும் எண் கொண்ட லாரி ஒரு காரை இடிப்பதாகப் படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. […]

06/03/2026 Dinesh R
வடம் விமர்சனம் | Vadam review சினிமா

வடம் விமர்சனம் | Vadam review

இரட்டையர்களாகப் பிறக்கும் இரண்டு காளைக் கன்றுகள், சிறு வயதில் பிரிந்து, திமிலுடன் வளர்ந்த பின், வடமாடு மஞ்சு விரட்டில் ஒன்று சேருவதுதான் படத்தின் கதை. வடம் என்றால் தடித்த கயிறு எனப் பொருள் கொள்ளலாம். வடமாடு மஞ்சுவிரட்டு என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஒரு மரபுவழி ஏறுதழுவல் விளையாட்டாகும். காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டி வைத்து, 9 முதல் 10 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு 20-25 நிமிடங்களில் […]

06/03/2026 Dinesh R
லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை சினிமா

லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் விமரிசையாக நடைபெற்றது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண […]

06/03/2026 Dinesh R
டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம் சினிமா

டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம்

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வரவுள்ள ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தில், ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தைக் கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக […]

06/03/2026 Dinesh R
துரந்தர்: தைரியம் – எரிபொருள் – பழிவாங்குதல் Movie Posters

துரந்தர்: தைரியம் – எரிபொருள் – பழிவாங்குதல்

நீண்ட நாட்களாக நீடித்த ஊகங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் ரசிகர்களின் தீவிர ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரன்வீர் சிங் நடிக்கும் ‘துரந்தர் பழிவாங்கல்’ படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன. நாளை காலை 11.01 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங், ஜஸ்கிரத் சிங் ரங்கி மற்றும் ஹம்ஸா என இரட்டை கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றுகிறார். முதல் பாகத்தை விட, இந்தப் பாகத்தில் […]

06/03/2026 Dinesh R
Police Family – லாக்கப் மரணங்கள் சினிமா

Police Family – லாக்கப் மரணங்கள்

சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’ ஆகும். ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது. அப்படிச் செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் […]

06/03/2026 Dinesh R
பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5 OTT

பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5

ஜீ 5 இல், பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளன. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ‘பூக்கி’ […]

05/03/2026 Dinesh R