32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4036 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 12)
“செண்பாவின் கொரியப் பயணம்” – பிரியங்கா மோகன் | Made in Korea சினிமா

“செண்பாவின் கொரியப் பயணம்” – பிரியங்கா மோகன் | Made in Korea

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதைப் பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையைக் கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் […]

07/03/2026 Dinesh R
முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review சினிமா

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

முப்பது வருடங்களுக்கு முன் வெளியான ‘காதல் தேசம் (1999)’ படத்தில், நட்பின் மேன்மையையும் இணக்கத்தையும் எடுத்தியம்பும் பாடலின் தொடக்கச் சொற்கள் ‘முஸ்தபா முஸ்தபா’ ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த அப்பாடல் நட்பிற்கான பாடலாக மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஆழமான நட்பினைச் சொல்லும் விதமாக இத்தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி சேனலில் வேலை செய்யும் கார்த்திக், எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில் ஒருநாள் மட்டுமே நடித்த ஒரு மார்க்கமான காட்சி, ஆபாச (porn) இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. […]

07/03/2026 Dinesh R
காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review இது புதிது

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

ஒரு நாள் நிகழ்வு மட்டுமே ஞாபகமிருக்கும் அதிதியைத் தினம் தினம் புதிதாகக் காதலிக்கிறார் சித்தார்த். 50 First Dates (2004) படத்தின் ஒரு வரிக் கதையால் இன்ஸ்பையராகி, இசை, துரோகம், ஏமாற்றம், ஆழ்ந்த காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு முக்கோண காதல்கதையைத் தந்துள்ளார் இயக்குநர் விஜய். ‘சிரிச்சா போச்சு’ எனும் விரதத்தைப் பூண்டவராகச் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மதும்கேஷ். அதிதி காதலைச் சொல்லும் இடத்திலும் கூட மருந்துக்கு முகத்தில் ஒரு மாற்றத்தைக் காட்டிவிடக் கூடாத என கங்கணம் […]

07/03/2026 Dinesh R
99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review சினிமா

99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

அறுபத்தாறாம் எண் வீட்டில் வசிக்கும் சங்கீதாவும், தொண்ணூற்று ஒன்பதாம் எண் வீட்டில் வசிக்கும் ரஞ்சிதாவும் தோழிகள். சங்கீதாவிற்கு அமானுஷ்யமான கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு நல்ல பெண் ஆத்மா இருப்பதே அதற்கெல்லாம் காரணம் என்று துர்கா தேவி அன்னையார் சொல்கிறார். அந்த ஆத்மா யார், ஏன் அங்கு இருக்கிறது என்பதே படத்தின் கதை. 9966 எனும் எண் கொண்ட லாரி ஒரு காரை இடிப்பதாகப் படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. […]

06/03/2026 Dinesh R
வடம் விமர்சனம் | Vadam review சினிமா

வடம் விமர்சனம் | Vadam review

இரட்டையர்களாகப் பிறக்கும் இரண்டு காளைக் கன்றுகள், சிறு வயதில் பிரிந்து, திமிலுடன் வளர்ந்த பின், வடமாடு மஞ்சு விரட்டில் ஒன்று சேருவதுதான் படத்தின் கதை. வடம் என்றால் தடித்த கயிறு எனப் பொருள் கொள்ளலாம். வடமாடு மஞ்சுவிரட்டு என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஒரு மரபுவழி ஏறுதழுவல் விளையாட்டாகும். காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டி வைத்து, 9 முதல் 10 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு 20-25 நிமிடங்களில் […]

06/03/2026 Dinesh R
லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை சினிமா

லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் விமரிசையாக நடைபெற்றது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண […]

06/03/2026 Dinesh R
டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம் சினிமா

டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம்

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வரவுள்ள ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தில், ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தைக் கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக […]

06/03/2026 Dinesh R
துரந்தர்: தைரியம் – எரிபொருள் – பழிவாங்குதல் Movie Posters

துரந்தர்: தைரியம் – எரிபொருள் – பழிவாங்குதல்

நீண்ட நாட்களாக நீடித்த ஊகங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் ரசிகர்களின் தீவிர ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரன்வீர் சிங் நடிக்கும் ‘துரந்தர் பழிவாங்கல்’ படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன. நாளை காலை 11.01 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங், ஜஸ்கிரத் சிங் ரங்கி மற்றும் ஹம்ஸா என இரட்டை கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றுகிறார். முதல் பாகத்தை விட, இந்தப் பாகத்தில் […]

06/03/2026 Dinesh R
Police Family – லாக்கப் மரணங்கள் சினிமா

Police Family – லாக்கப் மரணங்கள்

சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’ ஆகும். ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது. அப்படிச் செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் […]

06/03/2026 Dinesh R
பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5 OTT

பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5

ஜீ 5 இல், பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளன. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ‘பூக்கி’ […]

05/03/2026 Dinesh R
அனோமி விமர்சனம் | Anomie review சினிமா

அனோமி விமர்சனம் | Anomie review

அனோமி என்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, நம்பிக்கையிழந்து, குறிக்கோள் இன்றி நிற்கும் ஒரு நிராதரவான நிலையைக் குறிப்பதாகும். மன அழுத்தத்தில் உள்ள ஜியான் பிலிப் இறந்து போகிறார். அதைத் தற்கொலை என காவல்துறை அதிகாரி ஜிப்ரான் வழக்கை முடிக்க, அது தொடர் கொலைகளில் ஒன்றென நீதிமன்றத்தில் நிறுவுகிறார் ஃபாரன்ஸிக்கில் வேலை செய்யும் ஜியானின் தமக்கை ஜாரா பிலிப். சைக்கோ கொலைக்காரனைப் பிடித்தாக வேண்டிய அழுத்தம் ஜிப்ரானுக்கு நேரிடுகிறது. தம்பியைக் கொன்றவனை ஜாராவும் மும்மரமாகத் தேடுகிறார். கொலை செய்தது […]

05/03/2026 Dinesh R
ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review இது புதிது

ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review

பட்டாம்பூச்சியை உருவகமாகப் பயன்படுத்தி, மானுட வாழ்க்கையின் நிலையற்றத்தன்மையைக் குறித்தும், அதை சாஸ்வதமென நம்பி நடப்பவற்றிற்குப் பொறுப்பேற்கும் மனித மனங்களின் முரணைக் குறித்தும் படம் தத்துவார்த்தமாகச் சொல்கிறது. ‘பட்டாம்பூச்சிகளைப் போல் ஒருநாள் சிறகடித்துவிட்டு, என்றென்றைக்கும் அது நித்தியம் என நினைத்துக் கொள்ளும் நாம் (We are like butterflies who flutter for a day and think it is forever)’ எனும் கார்ல் சாகனின் (Carl Sagan) மேற்கோளுடன் படம் தொடங்குகிறது. கல்லூரிக் காலத்தில் தனக்கும் […]

04/03/2026 Dinesh R
நோவா – Supernatural Fantasy Thriller சினிமா

நோவா – Supernatural Fantasy Thriller

ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல் (NOVA: Phase One – The Arrival) ஆகும். இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ, இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார். கதையின் நாயகியாக பியார் பிரேமா காதல் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ […]

04/03/2026 Dinesh R
கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை சினிமா

கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்” ஆகும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுசீந்திரன், “ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலைச் சொன்னவர் இயக்குநர். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையைக் கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் […]

03/03/2026 Dinesh R
காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5 OTT

காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் Z5 இல் வெளியாகின்றன. Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன […]

02/03/2026 Dinesh R