32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4072 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 64)
கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம் இது புதிது

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ ஒன்றைத் தருவிப்பதையோ, வரவைப்பதையோ கான்ஜுரிங் எனச் சொல்வார்கள். அப்படி மந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்கின்றான் கண்ணப்பன். அவனுடன் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கும், சைக்காட்ரிஸ்ட் ஜானியும், கண்ணப்பனின் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித் தவறித் தூங்கினால், அந்த அமானுஷ்ய கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதில் இருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கான நேரத்தை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, நேராகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். சதீஷ் தனியாகச் […]

09/12/2023 Dinesh R
“விஜய் குமார் என்றால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இது புதிது

“விஜய் குமார் என்றால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்” திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாகத் தயாரிப்பாளர் ஆதித்யா, “ஃபைட் கிளப், மிகப் பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப் படம் பற்றிப் பேச […]

02/12/2023 Dinesh R
சலார் – ட்ரெய்லர் Trailer

சலார் – ட்ரெய்லர்

 ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்: பார்ட் 1 – சீஸ்ஃபயர்’ படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள் தற்போது, இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ‘சலார்: பார்ட் 1 – சீஸ்ஃபயர்’ படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த ட்ரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர். பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் […]

01/12/2023 Dinesh R
டங்கி | அன்பானவர்களை விட்டுத் தொலைவில் இருப்பதன் வலி அயல் சினிமா

டங்கி | அன்பானவர்களை விட்டுத் தொலைவில் இருப்பதன் வலி

டங்கி டிராப் 2, ‘லுட் புட் கயா‘ பாடலைத் தொடர்ந்து, சோனு நிகாமின் அடுத்த டிராக்கிற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. மியூசிக்கல் மேஸ்ட்ரோ ப்ரீதமால் வடிவமைக்கப்பட்ட இந்த மெல்லிசைப் பாடல், முதலில் படத்தின் டங்கி டிராப் 1 வீடியோவில் அறிமுகமானது. அப்போதிலிருந்தே ஷாருக்கான் மற்றும் சோனு நிகாமின் கூட்டணியில் பார்வையாளர்கள் அப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார்கள். பல ஆண்டுகளாக அழகான மெலோடிகளை, மறக்க முடியாத தருணங்களை உருவாக்கியதற்காக அறியப்பட்ட இந்தக் கூட்டணி, இந்த அற்புதமான […]

01/12/2023 Dinesh R
“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன் சினிமா

“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன்

சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’ ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், […]

01/12/2023 Dinesh R
“சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கவேண்டும்” – எஸ்.வி.சேகர் | எமகாதகன் சினிமா

“சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கவேண்டும்” – எஸ்.வி.சேகர் | எமகாதகன்

சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’ ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், […]

01/12/2023 Dinesh R
டங்கி | ஷாருக்கான் ரசிகர்களின் அன்புப்பயணம் சினிமா

டங்கி | ஷாருக்கான் ரசிகர்களின் அன்புப்பயணம்

ஷாருக்கானின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் உள்ள SRK ரசிகர்கள் இந்த டிசம்பரில் டங்கியைப் பார்க்க இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். திரைப்படத்தின் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளைத் தூண்டும் உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகியுள்ளது டங்கி. இந்தப் பண்டிகைக் காலத்தில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து SRK திரைப்படத்தை இந்தியத் திரையரங்கில் அனுபவிப்பதன், தனித்துவமான மகிழ்ச்சிக்காக ரசிகர்கள் ஏங்குகிறார்கள். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகிற இந்த ரசிகர்கள் […]

01/12/2023 Dinesh R
“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங் சினிமா

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் […]

26/11/2023 Dinesh R
காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன் இது புதிது

காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன்

எண்பத்தொரு வயதான திருமதி கே.எஸ். தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டனில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்தவண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதுவும் அவள் வீழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது. அமெரிக்காவில் […]

26/11/2023 Dinesh R
குய்கோ விமர்சனம் இது புதிது

குய்கோ விமர்சனம்

கதைக்காகத் திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நிறைய உண்டு. ஆனால் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவைக்காகவும் நையாண்டிக்காகவும், அரசியல் பகடிகளுக்காகவும், கதாபாத்திர வடிவமைப்பிற்காகவும், இயல்பான யதார்த்தமான நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அமைதிப்படை, களவாணி, தமிழ்ப்படம், ஒரு கிடாயின் கருணை மனு, ஆண்டவன் கட்டளை என வெகு சில படங்களே! அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “குய்கோ”. அமைதிப்படை […]

26/11/2023 Dinesh R
80’ஸ் பில்டப் விமர்சனம் இது புதிது

80’ஸ் பில்டப் விமர்சனம்

சந்தானத்தின் தாத்தா R. சுந்தர்ராஜன் இறந்து விட, அவரது 5 ஆசைகளை நிறைவேற்றிய பின்பே அவரை அழைத்துச் செல்வேன் என வரமளிக்கிறார் எமன் K.S.ரவிக்குமார். தாத்தாவின் சாவிற்கு வரும் ஒரு பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார் கமல் ரசிகரான சந்தானம். தாங்கள் திருடிய வைரங்கள், இறந்துவிடும் R. சுந்தர்ராஜனின் வயிற்றுக்குள் மாட்டிக் கொள்ள, அதை மீட்கப் பார்க்கின்றது மன்சூர் அலிகானின் குழு. இந்த மூன்று கதையும், ஒரு சாவு வீட்டில் நிகழ்கிறது. சந்தானத்தின் காதல் கை […]

25/11/2023 Dinesh R
நெப்போலியன் விமர்சனம் அயல் சினிமா

நெப்போலியன் விமர்சனம்

நெப்போலியனின் மொத்த வாழ்க்கையையும் மூன்று வார்த்தையில் அடக்கிவிடலாம். படம் முடியும்பொழுது, அவர் இறக்கும் முன் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைத் திரையில் காட்டுகின்றனர். அவை, ஃபிரான்ஸ், படை (Army), ஜோசஃபின் ஆகும். அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான இம்மூன்றும் தான் நெப்போலியனின் வாழ்க்கையும், இந்தப் படத்தின் திரைக்கதையும் ஆகும். இப்படம், நெப்போலியனை ஒரு காவிய நாயகனாகக் கொண்டாடவில்லை. மாறாக, அவரை ஒரு சக மனிதராகத் திரையில் முன்னிறுத்தி, ரிட்லி ஸ்காட் ஒரு காவிய படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபலமான ஆங்கிலக் […]

25/11/2023 Dinesh R